ரஜினி, விஜயை விடவா சூர்யா பெரிய ஹீரோ? இப்படி யாரும் ஒப்பனா பேசல?

By Chandra R

Published:

சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகி இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார். கங்குவா திரைப்படத்தை பற்றி பேசும்போது படம் ஆயிரம் கோடியை தாண்டும். ஏன் 2000 கோடியை நெருங்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

இதற்கு இடையில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் பெரிய படங்களுக்கு காஸ்ட் அண்ட் க்ரூ ப்ரயோஜனம் இல்லை என சொல்லும்போது எல்லோரும் அதை வேட்டையன் பற்றி தான் பேசுகிறார் ஞானவேல் ராஜா என கூறினார்கள். ஆனால் இல்லைங்க அது ஒரு ஹிந்தி படத்தை பற்றி பேசி இருக்கிறேன் என கூறினார்.

இன்னொரு ஆடியோவும் வெளியான போது அதில் மழைக்காலத்தில் இந்த வேட்டையனே பாருங்க. எவ்வளவு கஷ்டப்பட்டுருச்சு. இதில் கங்குவா படம் வந்திருந்தால் எவ்வளவு பிரச்சனை ஆயிருக்கும் என ஞானவேல் ராஜா அதில் கூறி இருந்தார். இந்த பேச்சு எந்த வகையில் நியாயப்படுத்தப்படுகிறது என நிருபர் ஒருவர் வலைப்பேச்சு பிஸ்மியிடம் கேட்டபோது அதற்கு பிஸ்மி கொடுத்த பதில் இதோ.

வேட்டையன் படத்தின் மீது அந்த தயாரிப்பாளருக்கு இருக்கும் வன்மம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. அவர் ஆரம்பத்துல நான் ரஜினி ரசிகன் எனக் கூறியிருந்தார். சொல்லப்போனால் அக்டோபர் 10 ஆம் தேதி ரஜினியின் வேட்டையன்தான் வரும் என கோடம்பாக்கத்தில் உள்ள பல பேருக்கு தெரியும்.

ஆனால் நாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டால் வேட்டையன் திரைப்படம் தள்ளிப் போகும் என ஞானவேல் ராஜா திட்டமிட்டு அக்டோபர் 10-ம் தேதியை லாக் செய்தார். ஆனால் ரஜினியின் தரப்பில் அந்த தேதியில் உறுதியாக இருந்ததனால் அக்டோபர் 10 ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் வர வேறு வழியில்லாமல் கங்குவா திரைப்படம் தள்ளிப்போனது.

அதனால் அந்த கடுப்பு ஞானவேல் ராஜாவுக்கு இருந்திருக்கிறது. அதுதான் ஞானவேல் ராஜாவை இந்த அளவு பேச வைத்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் வேட்டையன் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இது தயாரிப்பாளருக்கு லாபமா நட்டமா என கேட்டால் திரைத்துறையில் வேட்டையன் திரைப்படத்தால் ஓரளவுக்கு தயாரிப்பாளருக்கு லாபம் தான் என சொல்கிறார்கள்.

வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் லாபம்தான் என சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது அதை ஒரு தோல்வி படம் போன்ற ஒரு தோற்றத்தை ஞானவேல் ராஜா ஏற்படுத்துகிறார் என்றால் அவருடைய வன்மம் என்ன என்பது நமக்குத் தெரிகிறது. அவர் வேட்டையன் திரைப்படத்தின் பெயரை குறிப்பிடாமல் இருக்கலாம். ஆனால் அவர் ரஜினி படத்தை தான் சொல்கிறார் என அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

நான் ஒரு ரஜினி ரசிகன். ரஜினி மீது அளவுக்கதிகமாக பற்று உள்ளவன் என சொல்லும் நீங்கள் எப்படி இப்படி பேச முடிகிறது. அப்போ ரஜினியின் மீது ஒரு வன்மம் இருக்க போய்தான் இந்த அளவுக்கு அவரால் பேச முடிகிறது. அதுவும் இன்றைய சூழலில் பாக்ஸ் ஆபிஸில் மன்னனாக திகழும் விஜயின் எந்தப் படமும் ஆயிரம் கோடியை தொடாத நிலையில் 40 வருட காலமாக ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் படம் கூட ஆயிரம் கோடியை தொடாத நிலையில் ஜெயிலர் படம் என்னவோ 700 கோடியை தொட்டிருக்கிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் விஜய் ரஜினியை விடவா சூர்யா ஒரு பெரிய ஹீரோ? எந்த நம்பிக்கையில் கங்குவா படம் 2000 கோடியை தாண்டும் என சொல்கிறார். 200 கோடியையே தாண்டாத ஒரு படத்தை 2000 கோடியை கண்டிப்பாக தொடும் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

அதுவும் அவர் பேசியதை கேட்கிற ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருந்தது? எப்படி உங்களால் எந்தளவுக்கு உறுதியாக கூற முடிகிறது என பத்திரிகை நண்பர்கள் அவரை திருப்பி கேள்வி கேட்க வேண்டாமா? இப்படி அமைதியாக இருக்கப் போய்தான் இந்த அளவுக்கு வாயில் வந்ததை எல்லாம் ஞானவேல் ராஜா பேசுகிறார் என பிஸ்மி மிகக் கடுமையாக  விமர்சித்து அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.