எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க.. எம்எல்ஏவிடம் கேட்ட பங்க் ஊழியர்.. அவரை தேர்ந்தெடுத்து கேட்ட காரணம் தான் ஹைலைட்டே..

By Ajith V

Published:

சமூக வலைத்தளத்தில் திறந்தாலே இயல்பாக பார்க்கும் விஷயங்களில் இருந்து மாறுபட்டு வினோதமாகவோ அல்லது அதிர்ச்சியாகவோ நடந்த சம்பவங்கள் தொடர்பான செய்திகள் அல்லது வீடியோக்கள் இடம் பெற்றிருக்கும். இப்படி எல்லாம் நடக்குமா, இப்படி எல்லாம் ஒருவர் செய்வாரா என நினைக்கும் அளவுக்கு அதில் வரும் வீடியோக்கள் அல்லது செய்திகள் இருக்கும் நிலையில் தற்போதும் அப்படி ஒரு சம்பவம் குறித்த நிகழ்வு தான் வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் 25 முதல் 30 வயதுக்குள் ஒரு ஆண்கள் தங்கள் வாழ்வில் திருமண வாழ்க்கையை தொடங்கி விடுகிறார்கள். சிலருக்கு வேலை உள்ளிட்ட பல விஷயங்கள் இருந்தாலும் கல்யாணம் ஆகாமல் 30 வயதை தாண்டி நடைபெறும் என்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் உத்திரபிரதேச மாநிலத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் 43 வயதான நபர் ஒருவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் ஆண்கள் சிலர் தனிமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அவர்கள் திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருப்பார்கள். இன்னொரு சிலர் திருமணமாக வேண்டும் என்று விரும்பினால் கூட ஏதாவது காரணங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அப்படித்தான் பெட்ரோல் பங்கில் இருக்கும் இந்த ஊழியருக்கும் நடந்துள்ளதாக தெரிகிறது.

உத்தர பிரதேச மாநிலம் சர்க்காரி என்னும் பகுதியின் எம்எல்ஏவாக பிரிஜ்பூஷன் ராஜ்பூட் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் பெட்ரோல் பங்கிற்கு சென்ற போது அவரது காருக்கு அருகே வந்த பங்க் ஊழியர், சுவாரஸ்யமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். தனக்கு 43 வயதாகும் நிலையில் இதுவரை திருமணம் நடக்கவில்லை என்றும் அதற்காக தாங்கள் பெண் பார்த்துக் தர வேண்டும் என்றும் எம்எல்ஏவிடமே கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு பிரிஜ்பூஷன் ராஜ்பூட் வியந்து போய், ‘நான் அதை செய்ய வேண்டும்?’ என்று கேட்க, ‘ஏனென்றால் நான் உங்களுக்கு வாக்களித்தேன்’ என்ற வித்தியாசமான பதிலை பங்க் ஊழியர் அகிலேந்திர காரே தெரிவித்துள்ளார். மேலும் எந்த ஜாதியாக இருந்தாலும் தனக்கு பிரச்சனை இல்லை என்றும் கூறிய அகிலந்திரே காரே நிச்சயம் எனக்கு வாக்களித்துள்ளதால் உங்களுக்கு நல்ல மணப்பெண் கிடைப்பதற்காக நான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அந்த பங்க் ஊழியர் அகிலந்திர காரே, தனக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இதனைக் கேட்டதும் எம்எல்ஏவோ இதுவே பல கோடி கணக்கில் சொத்து மதிப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.