அடிப்பொலி! தீபாவளி சரவெடியாத்தான் இருக்கப் போகுது.. வெளியான ‘ப்ளடி பெக்கர்’ டிரெய்லர்

By Chandra R

Published:

Estimated Reading Time: 1 minute

தற்போது கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகின்றது. சிவபாலன் முத்துக்குமாரன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள திரைப்படம் தான் ப்ளடி பெக்கர். இந்தப் படத்தில் கவின் உண்மையிலேயே ஒரு பிச்சைக்காரன் எப்படி இருப்பாரோ அப்படியான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உண்மையிலேயே பிச்சை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

படம் தீபாவளி ரிலீஸாக வரும் 31ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்தை நெல்சன் தயாரித்திருக்கிறார். டிரெய்லரை பார்க்கும் போது ஒவ்வொரு சீனும் அடுத்தடுத்து என்னவாக போகிறது என்ற ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. பிச்சை எடுத்துக் கொண்டிருக்க திடீரென ஒரு பெரிய மாளிகையை பார்த்ததும் கவின் உள்ளே போக அங்கு இருக்கும் உயர்தரமான பொருள்களை பார்த்ததும் அவருக்கு ஆசை வருகிறது.

உடனே அங்கு இருக்கும் பாத் டப்பில் குளிக்கிறார். தன்னை பரவசப்படுத்திக் கொள்கிறார். திடீரென ஒரு கும்பல் அந்த மாளிகைக்குள் வர அவர்களால் அடுத்தடுத்து கவினின் நிலைமை என்னவாக போகிறது என்பது போல் டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் ப்ளடி பெக்கர் டிரெய்லர் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் ரசிகர்கள் அனைவரும் கவின் இந்தப் படத்தின் மூலம் மேலும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில், கவின் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

இந்த தீபாவளி ரிலீஸாக ப்ளடி பெக்கர் திரைப்படத்தோடு சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் மற்றும் ஜெயம் ரவி பிரதர் படமும் ஒன்றாக ரிலீஸாக இருக்கின்றது. அதனால் தீபாவளி ஒரு ஃபுல் பார்ம் ரேஸாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை