இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் வட இந்திய சுற்றுலாவிற்கு தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்திய ரயில்வே குறைந்த கட்டணத்தில் நாடு முழுக்க தனது போக்குவரத்துச் சேவையை வழங்கி வருகிறது. மேலும் தற்போது விமானங்களுக்கு நிகராக வந்தே பாரத் ரயில்களும் வந்துவிட்டது. இதனால் எப்போது ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நீண்ட தூரம் உடல் அலுப்பு தெரியாமல் பயணம் செய்வதற்கும், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய மிகவும் சவுகரியமான போக்குவரத்தாக ரயில்வே விளங்கி வருகிறது.
ரயில்வே சார்பில் அவ்வப்போது சுற்றுலா ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து வட இந்தியாவில் புகழ்பெற்ற கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்து வரும் வகையில் ஆன்மீக யாத்திரை செல்வதற்கான சூப்பர் பிளானை தற்போது ரயில்வே அறிவித்துள்ளது. வருகிற தீபாவளிப் பண்டிகையையொட்டி ‘கங்கா ஸ்நானம்’ சிறப்பு ரயில் யாத்திரையை ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்திருக்கிறது.
வாராஹியை வழிபடுவதால் இவ்வளவு விசேஷமான பலன்கள் கிடைக்குமா? உகந்த நாள் எது தெரியுமா?
ராமேஸ்வரம் அருகே மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து வருகிற 28-ம் தேதி புறப்படும் இந்த ரயிலானது தீபாவளிப் பண்டிகை அன்று காசி விஸ்வநாதரைத் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காசி யாத்திரை முடிந்த பின் தொடர்ந்து பிரயாக்ராஜ், கயா ஆகிய இடங்களுக்கும் செல்லும் வகையில் இந்த யாத்திரை அமைய உள்ளது. இதற்காக காரைக்குடி, திருச்சி, தஞ்சை, விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் சேது சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் இந்த சுற்றுலாவானது அமைய உள்ளது.
இந்த யாத்திரைக்கு நபர் ஒருவருக்கு ரூ. 29,420 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 9 நாட்கள் இந்த சுற்றுலா ரயில் வட இந்திய ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று மீண்டும் தமிழகம் திரும்புகிறது.