ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர், 10 வருடங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் நான்கு மனைவிகள், இரண்டு கேர்ள் பிரண்ட் மற்றும் 54 குழந்தைகளுடன் காலத்தை தள்ளி வருவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வாழ்க்கையில் திருமணம், பெண்களுடன் உறவு மற்றும் குழந்தைகள் என ஜாலியாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது நான்கு மனைவிகள் மற்றும் இரண்டு கேர்ள் பிரண்ட் இருப்பதாகவும், இவர்கள் மூலம் 54 குழந்தைகள் இருப்பதாகவும் தகவல் அறியப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க வீட்டின் செலவுக்கு தன்னுடைய மனைவிகளின் வருமானத்தை நம்பியிருக்கும் இவர், தனது குழந்தைகள் அனைவரையும் இவர் தான் பார்த்துக் கொள்கிறார் என்றும், வீட்டு வேலைகள் அனைத்தையும் இவர் தான் செய்து வருகிறார் என்றும், அதன் மதிப்பு மாதம் 5 லட்சத்துக்கு மேலாகும் என்றும் அவர் தனது மனைவிகளிடம் கூறியுள்ளார்.
மனைவிகள் மற்றும் கேர்ள் பிரண்ட்களின் வருமானத்தின் மூலம் வாழும் இவர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவியுடன் தூங்குகிறார் என்றும், இன்னும் சில பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்பது தனது எண்ணம் என்றும் கூறியுள்ளார்.
தமது மனைவிகள் மற்றும் கேர்ள் பிரண்ட்களுக்கு தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பொறாமையின்றி தோழிகள் போல் இருக்கிறார்கள் என்றும், சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நாங்கள் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக வாழ்கிறோம் என்றும், எங்களுக்குள் எந்த விதமான கருத்து வேறுபாடு இல்லை என்றும், வாரத்துக்கு 28 முறை தனது மனைவி மற்றும் கேர்ள் பிரண்டுடன் உடலுறவு கொள்வதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.