ATM கார்டு இல்லாமலேயே இனி பணத்தை எடுக்கலாம்… அது எப்படி தெரியுமா?

By Meena

Published:

இன்றைய காலகட்டத்தில் யாரும் கையில் பணம் எடுத்துச் செல்வதில்லை. ஷாப்பிங் போனாலும் சரி உணவகத்தில் உணவருந்த சென்றாலும் சரி சுற்றுலா எங்கு போனாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை விரும்புகிறார்கள். இந்த ஆன்லைன் பரிவர்த்தனை வேலை செய்யாமல் கூட போகலாம். ப்போது நமக்கு தேவைப்படுவது ATM கார்டு. சரி ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய முடியவில்லை ஏடிஎம் கார்டில் பணம் எடுக்கலாம் என்று சென்றாலும் சில சமயத்தில் ஏடிஎம் கார்டுகள் வேலை செய்யாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வது இன்று பார்க்கும் பொழுது அதற்கு ஒரு வழி இருக்கிறது.

அதுதான் ஆதார் கார்டு மூலம் பணம் எடுக்கும் முறை. இதன் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல் உங்களால் பணத்தை எடுக்க முடியும். அது எப்படி என்று இனி காண்போம். இன்று எல்லா இடங்களிலும் ஸ்கேன் கோடை வைத்திருக்கிறார்கள். சிறிய தெருமுனை உணவகங்ளில் இருந்து ஸ்டார் ஹோட்டலில் வரை அனைத்து இடங்களிலும் ஸ்கேன் கோடு இருக்கிறது. அதனால் பணம் பரிவர்த்தனை எளிது என்றாலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் முறை உங்களுக்கு உதவும்.

AEPS கட்டண முறையின் மூலம் ஆதார் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். இந்த AEPS என்பது ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை என்பது ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை மூலம் பணம் எடுக்கும் சேவைகளை வழங்குகிறது. நிதி பரிமாற்றம், எவ்வவுத் தொகை நமது வங்கியில் இருக்கிறது போன்றவற்றை பார்த்துக் கொள்ளலாம். இந்த ஆதார் மூலம் பணம் எடுக்கும் AEPS வசதி இந்திய தேசிய கட்டண கழகத்தால் வழங்கப்படுகிறது.

ATM கார்டு இல்லாமல் ஆதாரை கொண்டு பணம் எடுப்பதற்கு நீங்கள் ஏஇபிஎஸ்ஐ ஆதரிக்கும் மைக்ரோ ATM மிற்க்கு செல்ல வேண்டும். மைக்ரோ ஏடிஎம் எந்திரத்தில் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக உங்கள் விரலை அதில் வைக்க வேண்டும். இப்போது பரிவர்தனை வகையிலிருந்து பணத்தை திரும்ப பெறுதல் என்பதை தேர்ந்தெடுத்து நீங்கள் பெற விரும்பும் தொகையை உள்ளீடு செய்தால் உடனே நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பரிவர்த்தனை முடிந்ததும் ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த AEPS வசதி மூலம் ஆதார் கார்டை வைத்து பணம் எடுப்பதற்கு உச்சவரம்பாக பத்தாயிரம் முதல் ரூபாய் 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அங்கீகரிக்கப்பட்ட மைக்ரோ ஏடிஎம்மில் மட்டுமே உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பரிவர்த்தனை தொடர்பான செயல்களை கண்காணிக்க வங்கியுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைத்து எப்போதும் செயலில் வைத்திருக்க வேண்டும். பரிவர்த்தனை முடிந்தவுடன் உங்களது ரசிதை கவனமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.