மத்திய பிரதேசம் : புதியதாக டிவிஎஸ் XL வாங்கிய வட இந்தியர் ஒருவர் வித்தியாசமான முறையில் பார்ட்டி வைத்து அனைவரையும் அசத்தியுள்ளார். நாம் ஏதாவது புதியதாக விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் போது நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பது வழக்கம். கார், பைக், விலை உயர்ந்த செல்போன் என அனைத்திற்கும் பார்ட்டி வைப்பது இப்போது பழக்கமாகி விட்டது.
அந்த வகையில் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முராரி. டீக்கடை வைத்துள்ளார். அவர் நண்பர்களுக்கு அடிக்கடி பார்ட்டி வைப்பது வழக்கம். அதுவும் ஏனோதானோ என்றில்லை. பிரம்மாண்ட பார்ட்டி வைத்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடுவார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தனது மகளுக்காக ரூ. 12,500 செலவில் புதிதாக செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதனைக் கொண்டாடும் விதமாக ரூ.25,000 செலவு செய்து பார்ட்டி வைத்திருக்கிறார்.
கண்ணதாசனை விமர்சித்து வானொலி உரை.. அடுத்த நிமிடமே வந்த போன்.. கப்சிப் ஆன பேச்சாளர்.. நடந்தது இதான்..
இதே போன்று தற்போது செய்துள்ள செயல்தான் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. முராரி புதியதாக டிவிஎஸ் XL வாகனம் ஒன்றை வாங்கியிருக்கிறார். ஆனால் அவர் அதனை ரொக்கமாக வாங்கவில்லை. ரூ. 20,000 மட்டும் முன் பணம் செலுத்தி வாங்கியிருக்கிறார். ஆனால் இதனைக் கொண்டாடும் விதமாக அவர் செய்த ஆடம்பரச் செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 60,000.
தான் புதிய வண்டி வாங்கியதைக் கொண்டாடும் வகையில் அதனை JCB வாகனத்தில் ஏற்றி பூமாலைகளால் அலங்கரித்து, மேளதாளம் முழங்க, DJ இசையுடன் அமர்க்களப்படுத்தி ஊர்வலம் வந்திருக்கிறார். இதில் அவரது உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொண்டார்களாம்.
தான் கடனில் வாங்கிய ஒரு பொருளுக்காக அதனைக் கொண்டாடும் வகையில் ஒரு விழாவையே எடுத்து அதை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி சிறப்பான சம்பவம் செய்திருக்கிறார் முராரி.