11 வருடங்கள் இந்தியன் ரயில்வேயில் வேலை.. இன்று எலான் மஸ்க் நிறுவனத்தின் முக்கிய ஊழியர்..!

By Bala Siva

Published:

 

11 வருடங்கள் இந்தியன் ரயில்வேயில் வேலை பார்த்த சஞ்சீவ் சர்மா என்பவர் இப்போது எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஊழியராக உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் உள்ள ஐஐடியில் படித்த சஞ்சீவ் சர்மா படிப்பை முடித்தவுடன் இந்தியன் ரயில்வேயில் வேலை சேர்ந்தார். அவர் அங்கு 11 வருடங்கள் வேலை பார்த்தார், அதாவது 1990 முதல் 2001 வரை. அதன் பின், அமெரிக்காவுக்கு சென்று மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி மேலாண்மை ஆகிய இரண்டு படிப்புகளில் மாஸ்டர் டிகிரி முடித்தார்.

பின்னர் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பணிபுரிந்தார். 2013 ஆம் ஆண்டில் எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் டைனமிக்ஸ் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.

அவர் பணியில் சேர்ந்த பிறகு, விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டின் முதல் நிலையை மீண்டும் பூமிக்கு திரும்பி அதனை மீண்டும் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த ஆய்வுகளை செய்தார். 2022 ஆம் ஆண்டு, அவர் அந்த நிறுவனத்தின் முதன்மை பொறியாளராக பணி புரிந்தார்.

தற்போது, சஞ்சீர் ஷர்மா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஊழியராக உள்ளார். சமீபத்தில் விண்ணிற்கு செலுத்தப்பட்ட சாட்டிலைட் மீண்டும் மீட்டெடுக்கும் அதிரடி சாதனைகளை நடத்தியவர்களில் இவரும் ஒருவர். விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்புவது உள்பட பல்வேறு திட்டங்கள் சஞ்சீவ் சர்மாவிடம் இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலக அளவில் சாதனை படைக்கும் போது இவருடைய பங்கும் முக்கியமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.