தனிநபர் விபத்து காப்பீடு பாலிசி பலர் எடுத்து இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு பாலிசி எடுக்க முடியுமா என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. அதற்கான முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
பொதுவாக, விபத்து காப்பீடு என்பது ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை பலர் எடுப்பார்கள். ஆனால், ஒரு சிலர், ரிஸ்க் அதிகமாக இருப்பவர்கள், ஒரு கோடி வரை எடுக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு கோடி ரூபாய்க்கு ஒருவர் தனிநபர் விபத்து காப்பீடு பாலிசி எடுக்க வேண்டும் என்றால், அதற்கான முதல் தகுதி அவருக்கு குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். பாலிசி எடுக்கும் போது, அவர் தனது வருமானத்திற்கு ஆதாரத்தை கொடுத்தால் தான், இழப்பீடு கூறும் போது சிக்கல் எதுவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிசி எடுப்பவரின் வயது, வேலை, கவரேஜ் தொகையை பொறுத்து, பிரீமியம் தொகை மாறுபடும். இந்த வகை பாலிசிகளின் நான்கு வகைகள் உள்ளன: விபத்தினால் ஏற்படும் இறப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் மற்றும் தற்காலிக ஊனம் என்ற நான்கு வகைகளில் இந்த கவரேஜ் பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும். ஒரு கோடி ரூபாய்க்கான தனிநபர் விபத்து பாலிசிக்காக பிரீமியம் செலுத்த வேண்டுமாயின், வயதைப் பொறுத்து, ஆண்டுக்கு 4000 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை பாலிசி தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் தனிநபர் விபத்து காப்பீடு பாலிசி எடுக்கும் போது, எவ்வளவு பிரீமியம் கட்ட முடியும் என்பதை ஆய்வு செய்து பாலிசி எடுத்துக் கொண்டால் தான், அந்த பாலிசிக்கு மதிப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.