தமிழில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் களமிறங்கி இருந்தார்கள். ஆனால் இதில் 17 போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு பிரபலமடைந்தவர்கள். இன்னொரு பக்கம் ஜெஃப்ரி என்ற ஒரு பெயரை விஜய் சேதுபதி அறிவித்ததும் பலரும் யார் இந்த பையன் என்று தான் ஒரு நிமிடம் யோசித்து இருப்பார்கள்.
ஆனால் கடந்த சில தினங்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் ஜெஃப்ரி விளையாடி வரும் ஆட்டம் பலரையும் வியக்க வைத்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. மற்ற போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள் என்பதை தாண்டி அவர்கள் என்ன தவறு செய்தாலும் அதை நேரடியாக கேட்டு வருவதில் முக்கியமான போட்டியாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் ஆண்கள் அணியில் தர்ஷா குப்தா ஆடிய போதும் அவர் வேண்டுமென்றே செய்த சில நாடகங்களையும் ஜெஃப்ரி தான் தைரியமாக தோலுரித்து பேசியிருந்தார்.
அப்படி ஒரு சூழலில் தற்போதும் மற்ற போட்டியாளர்கள் தன்னை சிரித்து கலாய்க்க அதை தைரியமாக ஜெஃப்ரி எதிர்கொண்ட விதம் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த வாரம் அடுத்தடுத்து டாஸ்க்குகளாலும், சண்டைகளாலும் பிக் பாஸ் வீடே அமர்க்களப்பட்டு கொண்டிருக்க, ரேங்கிங் டாஸ்க் நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது ஒருவரும் ஜெஃப்ரிக்கு வாக்களிக்கவில்லை என்ற சூழலில் சிலர் சிரிக்கவும் தொடங்கினர்.
இதனால் வேதனை அடைந்த ஜெஃப்ரி, “நீங்க முதல்ல சிரிக்காதீங்க. உங்ககிட்ட நான் ஓட்டு போடுங்கன்னு கேக்கல. ஆனா சிரிக்காதீங்க. இங்க இருக்கிற உங்களை மக்களுக்கு தெரியும். ஆனா என்னை யாருக்கும் தெரியாது. நானும் உங்கள மாதிரி இருந்திருந்தேன்னா, இந்த ஓட்டெல்லாம் பிரிஞ்சிருக்கும். கேள்வி கேட்கிற இடத்தில நான் இருக்கேன். இதுல தப்பு ஒன்னும் இல்லையே” என ஜெஃப்ரி கூறியதும் பலரும் மன்னிப்பு கேட்க தொடங்கிவிட்டனர்.
இதனைக் குறிப்பிட்டு பேசும் ஜெஃப்ரி, “நான் உங்களை ஸாரி எல்லாம் கேட்க சொல்லல. நீங்க ஸாரி சொல்லணும்னு நீங்க பேசல. நான் கேட்டது கரெக்ட்டா தப்பா. பிக் பாஸ் ஒரு கேள்வி கேட்கணும்னு சொன்னதை கட்டுப்பட்டு தான் நான் இங்கே நின்னுட்டுருக்கேன்.
நீங்க ஓட்டு போட்டா தான் நான் உள்ள. இல்லனா வெளியே எல்லாம் இங்க கிடையாது. நீங்க தூங்குற இடத்துல தான் நானும் தூங்க போறேன். ஒருத்தன் சொல்லும்போது சிரிக்க கூடாது” என்றும் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து கொஞ்ச நேரம் கழித்து சிரித்துக் கொண்டிருந்த விஷால் ஜெஃப்ரியிடம் மன்னிப்பும் கேட்டார்.
அங்கே தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் ஜெஃப்ரி, தாயையும் தனது நண்பர்களையும் மிஸ் செய்வதாகவும் அவர்கள் இருந்திருந்தால் என்னை இப்படி தனியாக விட்டிருக்க மாட்டார்கள் என்றும் மிக அதிகமாக அழுது கொண்டே இருக்கிறார்.