3 நாட்கள் Work From Home.. இறங்கி வந்தது பிரபல நிறுவனம்.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!

By Bala Siva

Published:

 

உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் Work From Home என்ற நடைமுறையை நிறுத்திவிட்ட நிலையில், அனைத்து ஊழியர்களும் அலுவலகம் வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக Work From Home என்ற வசதியை அனுபவித்த ஊழியர்கள் திடீரென அலுவலகத்திற்கு வரச் சொல்வதால், பலர் தங்கள் வேலையை ராஜினாமா செய்து வருவதாகவும், பலர் வேறுவழியின்றி தினசரி அலுவலகம் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, Work From Home நடைமுறையை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை என்ற நிலையில், மூன்று நாள் மட்டும் Work From Home என்றும், இரண்டு நாள் அலுவலகம் வந்தால் போதும் என்றும் அறிவித்துள்ளது.

இதனால் வேலையை ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருந்த பல ஊழியர்கள் வேலையில் தொடர முடிவு செய்திருப்பதாகவும், மூன்று நாள் Work From Home என்பது ஓகே தான் என்று பல ஊழியர்கள் கருத்து தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில், மற்ற நிறுவனங்களும் இதே போல் Work From Home மற்றும் அலுவலகம் என மாறி மாறி வரும் நடைமுறையை அமல்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.