பெங்களூரில் ஹெலிகாப்டர் போன்ற எலக்ட்ரிக் பறக்கும் வாகனம் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இரண்டரை மணி நேர பயணம் இனிவரும் 19 நிமிடங்கள் தான் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மிக அதிகமாக டிராபிக் பிரச்சனை ஏற்படும் நகரங்களில் ஒன்று பெங்களூர் என்பதும் குறிப்பாக விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டி செல்ல வேண்டும் என்றால் சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும் என்றும் அந்த பாதையில் வாகனங்கள் ஊர்ந்து தான் செல்லும் என்பதும் பெங்களூர் வாசிகளுக்கு தெரிந்தது.
இந்த நிலையில் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு ஹெலிகாப்டர் போன்ற பறக்கும் எலக்ட்ரிக் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் பெங்களூர் விமான நிலைய நிர்வாகம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த பறக்கும் வாகனத்தில் பறந்து சென்றால், கார் அல்லது டாக்ஸியில் இரண்டரை மணி நேரம் பயணம் வெறும் 19 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்றும் இதன் கட்டணம் 1700 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கார் அல்லது டாக்ஸியில் சென்றால் 2500 ரூபாய் கட்டணம் ஆகும் என்ற நிலையில் அதைவிட குறைவு தான் இந்த பறக்கும் வாகனத்தில் செல்வது என்பதும் நேரமும் மிச்சப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் இந்த திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும் இந்த சேவை இரண்டாவது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்படும் என்றும் அரசின் அனுமதி பெற்று இந்த வான் போக்குவரத்து சேவை செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.