வடகிழக்குப் பருவமழை: சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

  வடகிழக்குப் பருவமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்த சென்னை மாநகராட்சியின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: * வடகிழக்குப் பருவமழை சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக -131 மிமீ மழையின்…

Chennai Meteorological Department has issued an alert regarding Tamil Nadu weather conditions for July 4

 

வடகிழக்குப் பருவமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்த சென்னை மாநகராட்சியின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* வடகிழக்குப் பருவமழை சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக -131 மிமீ மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாய்ந்த மரங்கள் எண்ணிக்கை 77, இதுவரை 77 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் * ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1368 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. * பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 98 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

நேற்று (15.10.2024) காலை உணவு 1000 நபர்களுக்கும், மதிய உணவு 45,250 நபர்களுக்கும், இரவு உணவு 2,71,685 நபர்களுக்கும், இன்று (16.10.2024) காலை உணவு 4,12,725 நபர்களுக்கும், மதிய உணவு 453,750 நபர்களுக்கும் என மொத்தம் 11,84,410 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

* பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களிலும் இன்றும் (16:10.2024), நாளையும் (17:10.2024) பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

* சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது.

* நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 501 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

* கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6963 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* மாநில பேரிடர் மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 8 குழுவினர் தயாநிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மணலி, எழும்பூர், செனாய் நகர் மற்றும் பள்ளிக்கரணையிலும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் செனாய் நகர்-2, வில்லிவாக்கம் மற்றும் ராஜரத்தினம் அரங்கத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* மாநில பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 80 வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சார்ந்த 100 வீரர்கள், மீட்புப் படகு, இயந்திர ரம்பம், ஸ்டெக்சர் உள்ளிட்ட மீட்பு கருவிகளுடன் பணி மீட்புப்பணியில் ஈடுபட சென்னையில் 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது.

* மழைக்காலத்தினை முன்னிட்டு, பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் இன்று 204 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

சென்னை குடிநீர் வாரியம்

* கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள்

* மற்ற மாநகராட்சி / நகராட்சி / மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சூப்பர் சக்கர் இயந்திரங்கள் 89 எண்ணிக்கை

* பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.

܀சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி வரை 4,025 நடைகள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 300 நிவரான மையங்கள் மற்றும் 98 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.