விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஏழு சீசன்களை கடந்து இப்போது எட்டாவது சீசனில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை அனைத்து சீசன்களையும் கமல் தொகுத்து வந்த நிலையில் விஜய் சேதுபதி எந்த அளவு மக்களை ஈர்ப்பார் என்ற ஒரு சந்தேகம் அனைவரிடத்திலும் இருந்தது.
ஆனால் ஆரம்பம் முதலே விஜய் சேதுபதி போட்டியாளர்களையும் சரி ரசிகர்களையும் சரி அவருடைய எதார்த்தமான பாணியில் கையாண்டு வருகிறார். அது அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷனாக பிரபல தயாரிப்பாளரும் பிக் பாஸ் ரிவ்யூவரான ரவீந்தர் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக எண்ட்ரி கொடுத்தவரும் ரவீந்தர்தான். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரவீந்தர் அவருடைய அனுபவங்களை ஒரு பேட்டியில் கூறுகிறார். அதாவது நிறைய பேர் அவருடைய சோசியல் மீடியா அக்கவுண்ட்டை டேக் செய்து பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
இந்த உடம்பை வைத்து எப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் போனீங்க? உட்காரவும் முடியாது எழுந்திருக்கவும் முடியாது என்றெல்லாம் கேள்விகளை கேட்டு வருகின்றார்களாம். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவீந்தர் ‘இதுதான் வாய்ப்பு என சில பேர் உள்ள வச்சு செஞ்சு விட்டானுங்க. அதற்குக் காரணம் நாம் பின்னாடி செஞ்ச சம்பவம் அப்படி. அது மீண்டும் நம்மை ஒரு ஆயுதம் போல தாக்கும்ல.
என்ன சார் கடைசில பிக் பாஸ்ல இத்தனை பேர் உங்களை கார்னர் பண்ணிட்டாங்களே என்று கேட்கும் பட்சத்தில் யானை என்றால் ஒரு ஆளால அடக்க முடியாது. 10, 15 பேர் சேர்ந்தாதான் அந்த யானையை அடக்க முடியும். அந்த கதை தான் நம்ம கதை. ஆடுனது கொம்பன் இல்ல. கும்கில ’ என அவருக்கே உரிய பாணியில் மிகவும் கெத்தாக காமெடியாக அவருடைய அனுபவத்தை கூறி இருக்கிறார்.