நெஞ்சில் ரத்தன் டாடா டாட்டூ.. நெகிழ வைத்த வாலிபர் பின்னால் இருந்த எமோஷனல் காரணம்.. வீடியோ

By Ajith V

Published:

கடந்த சில தினங்களுக்கு முன்பாக உலக அளவில் பலராலும் ஈர்க்கப்பட்டு தொழிலதிர் ஆக வேண்டும் என விரும்பும் பலரும் ஒரு புத்தகத்தைப் போல படித்து வரப்பட்டவர் தான் ரத்தன் டாடா. டாடா நிறுவனம் இன்று உலக அளவில் கவனம் பெற்று வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கிய ரத்தன் டாட்டா, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தனது 86 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமாகி இருந்தார்.

தொழிலதிபர் என்பதை தாண்டி சிறந்த மனம் படைத்த ரத்தன் டாடா, தான் சம்பாதித்த பெரும் பங்கிலான பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கும், இயலாத மக்களுக்கும் தான் கொடுத்து உதவி இருந்தார். டாடா நிறுவனத்தின் மிக முக்கியமான ஒரு தூணாக விளங்கிய ரத்தன் டாடா, தான் ஒரு பெரிய தொழிலதிபர் என்ற கோணத்திலும் உலக அளவில் பெயர் பெற்ற ஒருவர் என்ற கோணத்திலும் அனைவரிடமும் பழகக் கூடியவர் கிடையாது.

சாதாரண மக்களிடம் கூட மிக எளிமையாக பழகும் குணம் படைத்த ரத்தன் டாடா, ஏராளமானோருக்கு தன்னால் இயன்றதை தாண்டிய உதவிகளையும் செய்து வந்தார். அவரது மறைவால் பலரும் கண்ணீர் வடித்திருந்த நிலையில் சமீபத்தில் ஒரு வாலிபர் நெஞ்சிலேயே ரத்தன் டாட்டாவின் டாட்டூவை குத்தியுள்ளதும் அதற்கு பின்னால் உள்ள காரணமும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஒருவர் அந்த நபர் குறித்தும் அவர் ரத்தன் டாடாவின் டாட்டூவை வரைந்தது குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த டாட்டூ குத்திய நபரின் நண்பர் ஒருவர் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலிருந்து குணமடைவதற்காக பல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போதிலும் அதிக பணம் வேண்டும் என்ற சூழல் உருவாகி உள்ளது.

இதனால், தனது நண்பரை காப்பாற்றவும் வழிகள் எதுவும் இல்லாமல் யாரும் முன்வராத நிலையில் தான் டாடா டிரஸ்ட் மூலம் புற்று நோய்க்கான சிகிச்சையையும் ஒரு ரூபாய் பணம் செலவில்லாமல் முடித்துள்ளர். சுமார் ஒன்றரை ஆண்டுகளில் தனது நண்பர் புற்று நோயிலிருந்து குணமடைந்து விட்டதாகவும் இதற்காக ரத்தன் டாடாவிற்கும், அவரது நிறுவனத்திற்கும் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் இந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தன் டாடாவை கடவுள் என குறிப்பிடும் அந்த நபர் தனது நண்பனை காப்பாற்றிதற்காக அவரது டாட்டூவை நெஞ்சில் குத்தியுள்ள சம்பவம் தற்போது அதிகம் வைரலாகியும் வருகிறது.