நீங்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கிவிட்டு விரைவாக வெளியில் செல்ல விரும்புபவரா? அப்படி இருந்தால், “பாஸ்கெட் ஸ்னீக்கிங் என்ற வலைகளில் சிக்கக்கூடும்.
பாஸ்கெட் ஸ்னீக்கிங் என்றால், நம் அனுமதி இல்லாமல், நம்முடைய ஆன்லைன் கூடையில் சில பொருட்களைச் சேர்த்து விடுவார்கள். நாம் ஒரு பொருளை மட்டும் வாங்க நினைப்போம்; ஆனால் அதே பொருள் பல முறை கூடையில் சேர்க்கப்படும். இதை “குறைந்தபட்ச ஆர்டர் அளவு” என்று கூறுவார்கள். நமக்கு உள்ள வேலைப்பளுவில் அதை நாம் கவனிக்காமல் விடக்கூடும் அல்லது முக்கியமில்லை என்று புறக்கணிக்கலாம்.
பாஸ்கெட் ஸ்னீக்கிங் என்பது, சில நேரங்களில் நாம் ஒரு பொருளை ஆர்டர் செய்யும் போது, நமக்கே தெரியாமல் மாதாந்திர சந்தாவில் சேர்த்துவிடுவார்கள். நாமே அதை ரத்து செய்யாதவரை, மாதந்தோறும் அந்தப் பொருள் நம் வீட்டிற்கு அனுப்பப்படும்.
ஆன்லைன் ஷாப்பிங் முடித்ததும் பணம் செலுத்துவதற்கு முன், நம் ஆர்டர் பட்டியலை ஒரு முறை சரிபார்ப்பது அவசியம். இதனால், பாஸ்கெட் ஸ்னீக்கிங் என்ற வலைகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.