சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கங்குவா. படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடமாக படத்திற்காக சூர்யா கடுமையாக உழைத்திருக்கிறார். இதுவரை இல்லாத அளவு வித்தியாசமான கதைகளத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா நடிக்கும் முதல் படம் கங்குவா.
இதற்கு முன்பு வரை கமெர்ஷியல் பேக்கேஜான ஃபேமிலி ஆடியன்சை எண்டெர்டெயின் பண்ணும்விதமாகவே சூர்யா நடித்திருந்தார். ஆனால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக கங்குவா இருக்கும். அதில் சூர்யா நடித்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகவே பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 10 ஆம் தேதி படம் ரிலீஸாக வேண்டியது. ஆனால் வேட்டையன் படத்தோடு மோத வேண்டாம் என கருதியே படத்தை நவம்பர் 14 ஆம் தேதி தள்ளி வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்திற்கான புரோமோஷன் ஆரம்பமாகிவிட்டது. படத்தை பற்றி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் மற்றும் 25 நிமிடங்கள் என சிறுத்தை சிவா கூறியிருக்கிறார். அதில் முதல் இரண்டு மணி நேரம் கங்குவா கேரக்டரில் சூர்யாவை பார்க்கலாம் என்றும் மீதமுள்ள 25 நிமிடங்கள் மற்றொரு சூர்யாவின் காமெடியான கேரக்டரை பார்க்கலாம். ஃபிரான்சிஸ் என்ற கதாபாத்திரத்தில் அந்த 25 நிமிட காட்சியில் சூர்யா வருகிறாராம்.
இதுவரை சூர்யா பண்ணாத இரு கேரக்டர்கள் கங்குவா படத்தில் இருக்கும். அதனால் எனக்கும் ஒரு ஆர்வம் இருந்தது. சூர்யாவுக்கும் இந்த கேரக்டர்கள் மீதுஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது என சிறுத்தை சிவா கூறினார்.