வந்தாச்சு BSNL இன் புதிய ஆப்… இனி எங்கு சென்றாலும் Live டிவி பார்க்கலாம்…

By Meena

Published:

தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களது சேவை கட்டங்களை உயர்த்தி இருக்கிறது. இது வாடிக்கையாளர்களிடம் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட BSNL சேவை கட்டணத்தை குறைத்தாது மட்டுமல்லாமல் பலவித ஆஃபர்களை வழங்குகிறது.

இதனால் ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கான பேர் BSNL சேவைக்கு மாறினர். தற்போது அடுத்த கட்டமாக BSNL புதிய லைவ் ஆப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஆப்பில் பிரத்தியேக கண்டண்டுகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறது. இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப்பில் பொழுதுபோக்கு கேபிள் டிவி தொலைபேசி சேவை ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குகிறது.

இதுவரை இந்த லைவ் டிவி ஆப் சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளருக்கு வழங்கி வந்தது. தற்போது இந்த லைவ் டிவி செயலியை BSNL வழங்க இருக்கிறது. விலை குறைவாக லைவ் டிவி பார்ப்பவர்களுக்கு BSNL செயலி சிறந்த தேர்வாக இருக்கும்.

ஐபிடிவி எனப்படும் இன்டர்நெட் புரோட்டோகால் டெலிகாம் என்பதை BSNL அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காக வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.130 ரீசார்ஜ் செய்தால் போதும். பிஎஸ்என்எல் லைவ் டிவி ஆப் நேரடியாக ஆண்ட்ராய்டு சாதனங்களில் நேரலை டிவியை அனுபவிக்க எளிதாக இருக்கும். குறைந்த விலையில் எங்கு சென்றாலும் லைவ் டிவியை பார்ப்பதற்கு பிஎஸ்என்எல் செயலியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.