அரகஜா என்றால் என்ன? பூஜையின் போது அதை எப்படி பயன்படுத்துவது?

By Meena

Published:

கோயில்களில் கடவுளுக்கு செய்யப்படும் அபிஷேகம் மற்றும் பூஜைகளில் பல முக்கியமான பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. அந்த முக்கியமான பொருட்களில் ஒன்றுதான் அரகஜா. அரகஜா என்பது வாசனை திரவியம் போன்று தான். பல வகையான மூலிகைகளை ஒன்று சேர்த்து மை போன்று தயாரிப்பது தான் அரகஜா என்பதாகும்.

இந்த அரகஜா மையில் வசீகர சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. அரகஜா மை நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. விலையும் மிகவும் மலிவுதான். நீங்கள் அரகஜா மையை வாங்க வேண்டும் என்று விரும்பினால் இரண்டு டப்பாக்களாக வாங்கிக் கொள்ளுங்கள். ஒன்று உங்கள் தனிப்பயனுக்கும் மற்றொன்று பூஜைக்கும் பயன்படுத்த தனி தனியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நம் பூஜை அறையை சுத்தம் செய்யும்போது கடவுள்களுக்கு பொட்டு வைக்கும் போது மஞ்சளில் கலந்து இந்த அரகஜா மையை பயன்படுத்தலாம். கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வாங்கி கொடுக்கும்போது இந்த அரஜா மையும் சேர்த்து வைத்து கொடுக்கும் போது விசேஷ பலன்கள் கிடைக்கும்.

நாம் வாழ்வில் வெற்றி பெறவும் பண வரவு ஏற்படும் அரகஜா மையை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். ஆனால் வெறும் மையை நெற்றியில் வைத்துக்கொள்ளாமல் மையை வைத்துவிட்டு அதற்கு மேல் குங்குமம் போன்றவற்றை சேர்த்து வைக்க வேண்டும். அரகஜா பயன்படுத்தும் போது சுத்தமாக குளித்துவிட்டு தான் பயன்படுத்த வேண்டும்.

அசுத்தமாக இருக்கும் போது இந்த அரகஜா மையை பயன்படுத்தக் கூடாது. இந்த அரகஜா மையை கையில் எடுத்து நாம் உபயோகப்படுத்தும் போது தெய்வீக நறுமணம் வரும். கோவில் போஞ்சு நம் வீடு நறுமணத்துடன் இருக்கும். இதை நெற்றியில் வைத்துக்கொள்ளும் போது கண் திருஷ்டி செய்வினை கோளாறுகள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு கூட நம்மை நெருங்காது என்று கூறப்படுகிறது.