விக்ரம் படத்துக்கு இன்டர்வெல் வந்தது இப்படித்தானா? எவ்ளோ கஷ்டப்பட்டுருக்காரு லோகி?

By Sankar Velu

Published:

உலகநாயகன் கமலுடன் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணிபுரிந்த படம் விக்ரம். 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் வசூலில் சக்கை போடு போட்டது. உலகம் முழுவதும் 435 கோடி வரை வசூலித்தது. இந்த வெற்றி கமலுக்கு அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்க உறுதுணையாக இருந்தது.

அதனால் தான் கமல் தற்போது ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க அமரன் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். அதே போல தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் சிம்புவின் படத்தையும் தயாரிக்க முன்வந்துள்ளார். அது பெரிய பட்ஜெட் என்பதால் கொஞ்சம் காலதாமதமாகிறது.

விக்ரம் படத்துல இன்டர்வெல் தான் முதல்ல கிளைமாக்ஸா இருந்தது. நான் நிறைய கதை யோசிச்சேன். ஆனா கமல் சார் சொன்ன ஒன்லைன் தான் விக்ரம். அதுக்கு நான் ஆறு மாசம் உட்கார்ந்து திரைக்கதை எழுதினேன்.

ஆனா இன்டர்வெல் மட்டும் மாட்டவே இல்லை. அப்புறம் ரத்னா தான் டீசர்ல காமிச்சதே வச்சிட்டேன்டான்னு சொன்னான். அப்புறம் கல்யாண செட்டப், சமையல், யூடியூபர்னு என்னென்னவோ வந்து இன்டர்வெல் அமைஞ்சது என்கிறார் லோகேஷ் கனகராஜ்.

vikram
vikram

2022ல் கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தான் இந்தப் படத்தைத் தயாரித்தது. படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். பகத்பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் கமலுக்கு ஜோடி கிடையாது. நரேன், காளிதாஸ் ஜெயராம், சந்தானபாரதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ளார். பத்தல பத்தல, விக்ரம் டைட்டில் டிராக், போர் கண்ட சிங்கம் ஆகிய பாடல்கள் உள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் சூர்யா தோன்றி அசத்தினார்.

இந்தப் படத்தின் தொடர்ச்சியும் வெளிவர உள்ளது. படம் விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்துடன் இருந்ததால் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

போதைப்பொருள்கள் பற்றிய படங்கள், வன்முறை, ரத்தக்களரி என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவரது படங்களில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என எல்லாப் படங்களுமே போதைப்பொருள் கடத்தல் தான்.

அதைச் சுற்றியே கதை நகர்கிறது. இதனால் ஏற்படும் சண்டைகளும், குழப்பங்களும் தான் படம். அதை எந்தளவு ஆடியன்ஸ்சுக்கு நல்லா ரீச் ஆகிற மாதிரி சேர்க்கணும்கற வித்தையைத் தெரிந்து வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ‘எல்சியு’ என்ற ஒரு சீரியஸைத் தன் படங்களில் கொண்டு வந்து ரசிகர்களுக்கு வெரைட்டியைக் கொடுத்து வருகிறார்.