AI சென்சார் தொழில்நுட்பம்.. இனி மொபைல் போன் திருடுபோனால் உடனே லாக் செய்துவிடலாம்..!

By Bala Siva

Published:

 

மொபைல் போன் என்பது ஒவ்வொரு நபருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் மொபைல் போன் திருடுபோகும்போது நம்முடைய பல டேட்டாக்கள் மற்றும் வங்கி கணக்குகள் ஆபத்தான நிலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், கூகுள் தற்போது ஆண்ட்ராய்டு ஃபோன்களில் போன் திருடுபோனால் உடனடியாக லாக் செய்யும் அம்சத்தை ஏ.ஐ அடிப்படையில் அமைத்துள்ளது.

பொதுவாக, போனை திருடுபவர்கள் உடனடியாக இன்டர்நெட் இணைப்பை துண்டிப்பார்கள். எனவே, நீண்ட நேரம் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் இருக்கும் போனை தானாகவே லாக் செய்யும் புதிய அம்சத்தை கூகுள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. எனவே திருடர்கள் எப்போதுமே ஆஃப்லைனில் தான் இருந்தால், அவர்களால் நமது வங்கி கணக்கை அணுக முடியாத நிலை ஏற்படும்.

மேலும், ஒரு திருடன் உங்கள் போனை எடுத்துக் கொண்டு திடீரென ஓடுகிறான் என்று வைத்துக் கொண்டால், ஏ.ஐ உடனே அதை கண்டுபிடிக்கும். சாதாரணமான நிலைக்கும், திடீரென ஓடுதல் என்ற நகர்தலையும் வித்தியாசப்படுத்தி, இந்த போன் திருட்டு போயிட்டது என்பதை உறுதி செய்து உடனடியாக அனைத்து பயன்பாடுகளையும் நிறுத்திவிடுகிறது. பைக் ஓட்டும் போது திருடுவது, பேருந்துகள் மற்றும் ரயில்களில் செல்லும்போது திருடுவதை கூட இந்த ஏ.ஐ கண்டுபிடித்து, பாதுகாப்பு உங்களின் சாதனம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.

மேலும், போனை தொலைத்தவர்கள் தங்களுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தி எங்கே இருந்தும் லாக் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. Find my Device செயல்பாடு மூலம் கூகுள் கணக்கு உட்பட அனைத்தையும் செயலிழக்க வைக்கும் அம்சமும் இருப்பதால், போன் தொலைந்தாலும் மனநிம்மதியுடன் இருக்கலாம்.
ஆனால், அதே நேரத்தில் பயனர்கள் Google Play Services என்ற அம்சத்தின் புதிய பதிப்பை ஆண்ட்ராய்டு போனில் நிறுவியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பாதுகாப்பு அம்சங்களை நிறுவிக்கொண்டால், நம்முடைய போன் எதிர்பாராத விதமாக தொலைந்தாலும், பாதுகாப்பாக இருப்பதை நாம் உணரலாம்.