ஒருவர் தன்னுடைய வீட்டில் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் ஒரு சில குறிப்பிட்ட அளவு மட்டுமே தங்கம் வைத்திருக்க வேண்டும் என்றும் அதற்கு மேல் தங்கம் ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் அதற்கான வருமான வரி வட்டி மற்றும் அவரது தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
தங்கத்தை பொருத்தவரை திருமணமான பெண் 500 கிராம் வரை எந்தவிதமான ஆவணமும் இன்றி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். அதேபோல் திருமணம் ஆகாத பெண் என்றால் ஆவணம் இல்லாமல் 250 கிராம் வரை வீட்டில் தங்கம் வைத்துக் கொள்ளலாம். திருமணமான மற்றும் திருமணம் ஆகாத ஆண் 100 கிராம் வரை மட்டுமே தங்கத்தை எந்தவித ஆவணங்களும் இல்லாமல் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
இதற்கு மேல் ஆவணம் இல்லாமல் தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்து வருமான வரி துறையினர் கண்டுபிடித்தால் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் ஆவணம் இல்லாமல் இருக்கும் தங்க நகைகளின் மொத்த மதிப்பையும் சம்பந்தப்பட்ட நபரின் வருமானமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்பின் அதற்குரிய வரி. வட்டி. அபராத தொகை ஆகியவை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே திருமணம் ஆன ஆண் மற்றும் பெண் ஆகியோர் தங்கள் வீட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் அதற்குரிய ஆவணங்களை ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.