கூகுள் நிறுவனம் வேலையிலிருந்து வெளியேறியவரை ரூ.22,000 கோடி கொடுத்து மீண்டும் வேலைக்கு சேர்த்துள்ளதாக வெளிவந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு கூகுள் மென்பொருள் பொறியாளராக நோம் ஷஜீர் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். 48 வயதான இவர் தனது சக ஊழியர் டேனியல் என்பவருடன் இணைந்து ஒரு சாட் பாட் உருவாக்கினார். ஆனால் அதை கூகுள் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட மறுத்தது.
இதனால் அதிருப்தி அடைந்த இருவரும் கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறி, ‘கேரக்டர் ஏஐ’ என்ற ஒரு நிறுவனத்தை சேர்ந்து தொடங்கினர். ஒரு சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து, ஒரு பில்லியன் டாலர் மதிப்பை அடைந்தது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனம் நோம் ஷஜீர் மற்றும் டேனியல் இருவரையும் மீண்டும் தங்களின் ஏஐ யூனிட்டில் வேலைக்கு சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக இந்நிறுவனம், இந்திய மதிப்பில் ரூ. 28,000 கோடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுளில் வேலைக்கு சேர்வது மட்டுமின்றி, அவர்களின் ‘கேரக்டர் ஏஐ’ நிறுவனத்தையும் கூகுள் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் வேலைக்கு சேர்க்க வேண்டுமென்ற நோக்கில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து கேரக்டர் ஏஐ நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தில் மீண்டும் நோம் ஷஜீர்மற்றும் டேனியல் இணைந்துள்ளதால் கூகுளின் ஜெமினி ஏஐ மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.