வேலைக்கு விண்ணப்பித்த பெண்.. 48 வருஷம் கழிச்சு வந்த பதில் கடிதம்.. இத்தன நாள் அந்த லெட்டர் இருந்த இடம் தான் அல்டிமேட்..

By Ajith V

Published:

பொதுவாக ஒருர் வேலைக்கு சேர வேண்டுமென்றால் தங்களை பற்றிய தகவல்கள் அடங்கிய ரெஸ்யூமை சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அவர்கள் அனுப்பும் போது அந்த நிறுவனத்தில் இருக்கும் வேலைக்கு தகுதியான ஆள் என்றால் நிச்சயம் உடனடியாக அழைப்பு வருவதுன் நேர்காணலும் நடைபெறும்.

நாம் வெயிலில் கடுமையாக அலைந்து திரிந்து ஒவ்வொரு நிறுவனமாக போய் வேலை இருக்கிறதா என கேட்பதை விட, நமது வேலை அனுபவம் உள்ளிட்ட தகவல்களை அடங்கிய ரெஸ்யூமை அனுப்பினால் அவர்கள் மேலோட்டமாக அதில் இருக்கும் தகவல்களை பார்ப்பார்கள். அப்படி நீங்கள் உங்கள் ரெஸ்யூமில் இடம்பெற செய்யும் விஷயங்கள் நிறுவனங்களை கவர்ந்ததால் நிச்சயம் அவர்கள் உங்களை பணிக்கு அமர்த்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள்.

அப்படி ஒரு சூழலில் தான், கடந்த 48 ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவர் வேலை ஒன்றில் சேருவதற்காக அந்த ரெஸ்யூமை அனுப்பி உள்ளார். அவருக்கான பதில் சமீபத்தில் திரும்பி வந்தது தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. UK பகுதியை சேர்ந்தவர் தான் டிசி ஹாட்ஸன் (Tizi Hodson). இந்த பெண்மணிக்கு தற்போது 70 வயதாகிறது.

இவர் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பாக, 1976 ல் தனது 22 து வயதில் மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் ஓட்டுநராக மாறுவதற்கு பிரபல நிறுவனத்தில் விண்ணப்பம் ஒன்றை அனுப்பி உள்ளார். முன்னதாக லண்டனில் ஒரு அபார்ட்மெண்ட்டில் மிக கவனமாக தனது ரெஸ்யூமை அவர் தயார் செய்துள்ளார். மேலும் தான் பெண் என்பதையும் அதில் மறைத்து ஆண் என குறிப்பிட்டுள்ளார்.

பாலின வேறுபாடு காரணமாக தனக்கு வேலை கிடைக்காமல் போய்விடும் என்றும் டிசி ஹாட்ஸன் அப்படி செய்துள்ளார். மேலும் தனது விண்ணப்பத்தில் எத்தனை எலும்புகள் உடைந்தாலும் பரவாயில்லை என்றும் வீராப்பாக டிசி ஹாட்ஸன் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த விண்ணப்பத்தையும் அவர் தபால் நிலையம் மூலமாக அனுப்பி வைத்த நிலையில் அதற்கான பதில் வரும் என்றும் காத்திருந்து வந்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து எந்த தகவலும் இல்லாததால் சற்று கலங்கிப்போன டிசி ஹாட்சன் தொடர்ந்து வேறு பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ரிஸ்க்கான சாகச பணிகள் அல்லது பயணங்களை மேற்கொண்டு வரும் அவர், பாம்பை கையாள்வதும், ஏரோபிக் பைலட்டாகவும், பப்பதற்கு கற்றுக் கொடுக்கும் இன்ஸ்ட்ரக்டராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தான் 48 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் மோட்டார் பைக் ஸ்டண்ட் டிரைவர் ஓட்டுனராவதற்கு அனுப்பிய விண்ணப்பத்தின் பின்னணி தெரிய வந்துள்ளது. டிசி ஹாட்னை வேலைக்கு சேர்வதற்காக அனுப்பப்பட்ட நிறுவனத்தி பதில் விண்ணப்பம், அங்குள்ள தபால் நிலையம் ஒன்றின் டிராயருக்கு பின்னால் 48 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் மாட்டி கிடந்ததாக கூறப்படுகிறது.

தனது வேலைக்கான விண்ணப்பம் சுமார் 50 ஆண்டுகள் கழித்து கையில் கிடைத்ததை மிகவும் வியப்பாக தான் டிசி ஹாட்ஸன் பார்க்கிறார். வேறு வேலைகளில் கவனம் செலுத்தி வந்தாலும், தான் பல முகவரிகள் மற்றும் நாடுகள் மாறியபோதும் எப்படி தனது கைக்கு சரியாக கடிதம் வந்து சேர்ந்தது என்பது தான் மர்மமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆரம்பத்தில் தனக்கு ஏன் திரும்ப பதில் வரவில்லை என நினைத்துக் கொண்டே இருந்ததாகவும் இப்போது அதற்கான காரணம் தெரிய வந்ததாகவும் சிரித்துக் கொண்டே டிசி ஹாட்ஸன் தெரிவித்துள்ளார்.