தின்பண்டங்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது தின்பண்டங்கள். சிப்ஸ் பாப்கார்ன் கேக் போன்றவைகள் இருந்தாலும் ஒரு சூடான டீயுடன் வடை சமோசா வைத்து சாப்பிடுவதும் சுவையே தனிதான். பல பேருக்கு உணவாக கூட இந்த டீயுடன் உள்ள பதார்த்தங்கள் இருந்திருக்கிறது.
ஆனால் இன்றைய சூழலில் ஃபாஸ்ட் புட் மோகம் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொள்ளும் உணவகங்கள் மக்களிடம் வாங்கும் பணத்திற்கு சரியாக உணவுப் பொருட்களை தருகிறார்கள் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே உணவுகள் கலப்படமாக வருகின்றது. இதில் இவர்கள் வேறு கெட்டுப்போன இறைச்சி காய்கறிகள் போன்றவற்றைக் கொண்டு உணவுகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.
ஒவ்வொரு இடத்திலும் இதை கண்டுபிடித்து அந்த கடையை ஆக்கிரமித்து சீல் செய்கிறனர். ஆனாலும் மறுபக்கம் தரம் இல்லாத உணவை விற்கும் அவலங்கள் இந்தியாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கெட்டுப்போன உணவு தரம் இல்லாத பொருட்கள் கொண்டு விற்பனை செய்தது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இருக்கும் பெரிய விஷயம் சாப்பிடும் உணவுகளில் பூச்சி பல்லி எலி போன்றவைகள் செத்து கிடப்பதுதான். அதேபோல் ஒரு சம்பவம் தற்போது உத்திரபிரதேசத்தில் நடந்திருக்கிறது.
உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய உணவகத்தில் சமோசா விற்பனை ஆகி இருக்கிறது. இந்த சமோசாவில் குட்டி கரப்பான் பூச்சி பாச்சான் ஒன்று செத்து கிடக்கிறது. இது மட்டுமில்லாமல் அதே இடத்தில் மற்றொரு உணவகத்தில் சமோசாவின் உள்ளே தவளை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது என்னடா சமோசாவில் ஸ்பைடர் சமோசா தவளை சமோசாவா என்று மக்கள் கொதித்து வருகின்றனர். காசு கொடுத்து வாங்கும் பொருளுக்கு நியாயமே இல்லாமல் இப்படி விற்பனை செய்கிறார்களே என்று கோபப்பட்டு பேசி வருகின்றனர்.