57 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன திருமண வீடியோ.. இத்தனை வருஷம் கழிச்சு பேஸ்புக் மூலம் கிடைத்த அதிசயம்..

By Ajith V

Published:

பொதுவாக திருமண நாள் என்பது ஒருவர் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒரு தருணமாக பார்க்கப்படுகிறது. இதற்கு பின்னர் வாழும் வாழ்க்கை என்பது இரண்டு பேரை சம்மந்தப்பட்டது என்பதுடன் அவர்கள் எடுக்கும் முடிவுகளால் தான் வாழ்க்கையும் முன்னோக்கி செல்லும். மிகவும் ஸ்பெஷலாக பார்க்கப்படும் திருமண நாள் என்பதை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் எடுத்து நினைவாக வைத்திருப்பார்கள்.

வயதாகி போனாலும் அவர்களது பேரன், பேத்திகளுக்கு தங்களின் திருமண வீடியோவை போட்டு காண்பிக்கும் போது கிடைக்கும் சுகத்தை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. மேலும் பல ஆண்டுகள் கழித்து அதனை பார்க்கும் போது இறந்து போன உறவினர்களைக் கூட வீடியோவில் நாம் காண முடியும் என்பதால் சற்று எமோஷனலான ஒரு தருணமாகவும் இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இருவர் கடந்த 57 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில் அவரது திருமண வீடியோ தொலைந்து போயுள்ளது. கடந்த 1967ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் வைத்து Aileen மற்றும் Bill Turnbull ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண வீடியோவை ஒரு புரொஜெக்டரை வாடகை வாங்கி பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த ஃபிலிமை எடுக்க மறந்த நிலையில் அந்த புரொஜெக்டருடன் சேர்ந்து வாடகைக்கு எடுத்தவரும் கொண்டு போயுள்ளார். அப்படி ஒரு நிலையில் அந்த புரொஜெக்டருக்கு சொந்தமானவர் தனது மருமகனான Terry Cheyne என்பவரிடம் தனது பிலிம்ள் மற்றும் ப்ரொஜெக்டரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிலிருந்த ஃபிலிம் உள்ளிட்ட பல பழைய பொருட்களை டெரி கவனித்து வந்த நிலையில் தான் தற்போது அதிலிருந்து பிலிம் அனைத்தையும் டிவிடியாகடந்த ஆறு மாதங்களுக்கு முன் மாற்றத் தொடங்கி ள்ளார். அப்போது தனக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஒருவரின் திருமண வீடியோ அதில் இருப்பதை கவனித்த டெரி, அதிலிருந்து ஒரு புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஆனால் 6 மாத காலமாக யாரும் அதனை அடையாளம் கண்டு கொள்ளாத நிலையில் தான், இன்னொரு பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டதை Aileen கவனித்துள்ளார். தனது திருமண வீடியோவில் இருந்த புகைப்படத்தை பார்த்து ஒரு நிமிடம் ஆனந்தத்தில் திளைத்து போயுள்ளார்.

து பற்றி பேசும் எய்லீன், “எனது அருகில் இருந்த கணவரிடம் நமது திருமண புகைப்படம் பேஸ்புக்கில் இருக்கிறது என கூறி விட்டு டெரிக்கு நான் மெசேஜ் செய்தேன். இத்தனை நாட்கள் எங்களின் திருமண பிலிம் அப்படியே இருந்ததை நம்பவே முடியவில்லை. எனது பெற்றோர்கள் அங்கும் இங்கும் நடப்பதை பார்த்து எமோஷனல் ஆனேன். எனது கணவரும் 100 வயதில் மறைந்த தனது தாத்தா, பாட்டியை பல ஆண்டுகள் கழித்து வீடியோ மூலம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

எங்களது திருமணத்தில் இருந்த பெரும்பாலான உறவினர்கள் தற்போது உயிருடன் இல்லை. இதனால், அவர்களை வீடியோவில் பார்த்தது இனம் புரியாத சந்தோஷத்தை கொடுக்கிறதுஎன ஆனந்த பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். 57 ஆண்டுகளாக திருமண வீடியோவை இழந்து தவித்தவர்களுக்கு அது மீண்டும் கிடைத்துள்ள சேத்தி, பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.