தமிழ் திரையுலகில் அனைவரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸை பொறுத்தவரைக்கும் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அதனால் துப்பாக்கி மாதிரி ஒரு படம்வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
விஜய் நடிப்பில் துப்பாக்கி படத்தை கொடுத்து அனைவரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார் முருகதாஸ். விஜயின் கெரியரில் டாப் 10 படங்களின் லிஸ்டில் துப்பாக்கி படம் கண்டிப்பாக இடம் பெறும். அந்தளவுக்கு ஒரு பக்கா கமெர்ஷியல் ஆக்ஷன் படமாக அமைந்தது. அதே மாதிரியான ஒரு படத்தை தான் இப்போதும் ரசிகர்களு எதிர்பார்க்கின்றனர்.
சிவகார்த்திகேயன் ஏற்கனவே அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் கமல் தயாரிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
இந்தப் படம் மறைந்த மேஜன் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. வரும் 31 ஆம் தேதி படம் ரிலீஸாகும் பட்சத்தில் படத்தின் தொடக்கவிழா சமீபத்தில்தான் நடைபெற்றது. அந்த விழாவிற்கு கமல், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, தேசிங்கு பெரியசாமி போன்றோர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பலரும் பலவித கருத்துக்களை கூறிக் கொண்டு வந்தார்கள். அப்போது பேசிய சிவகார்த்திகேயன் கமல் சார் இதற்கு முன்னாடி என் படத்தை பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அமரன் படத்தை கண்டிப்பாக கமல் சார் பார்த்தே ஆகவேண்டும் என கூற அனைவரும் சிரித்தனர்.
ஏனெனில் ஒரு தயாரிப்பாளராக கமல் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் சிவகார்த்திகேயன் காமெடியாக கூறினார்.