பிரச்சனைகளே வாழ்க்கையாகி போனதா? இந்த வழிபாட்டை செய்யுங்க…

By Meena

Published:

வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் ஏற்ற இறக்கங்கள் இருக்க தான் செய்யும். ஆனால் பலருக்கு பிரச்சனைகளே வாழ்க்கையாகி போயிருக்கும். என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருப்பார்கள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல ஒரு சில நேரத்தில் தெய்வங்களை வழிபடும்போது நமக்கு நன்மைகள் நடக்கும். அப்படி தீராத பிரச்சினைகள் தீருவதற்கு சிறந்த வழிபாடு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

நாம் எவ்வித பிரச்சனையில் இருந்தாலும் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் பிரதோஷ வழிபாடு செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய விரதம் மற்றும் வழிபாட்டில் முக்கியமானது பிரதோஷம். மூஉலகிற்கும் ஏற்பட இருந்த பேரழிவை காத்தருளிய வேளையே பிரதோஷ வேளையாகும்.

ஒரு மாதத்தில் வளர்பிறை பிரதோஷம் தேய்பிறை பிரதோஷம் என இரு முறை நிகழும். திரையோசை திதி நேரமாகிய சூரியன் மறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகை மறைவுக்கு பின்னே மூன்றே முக்கால் நாழிகை என மொத்தம் ஏழரை நாழிகை காலம் பிரதோஷ காலமாக இருக்கும். மாலை 4 மணி முதல் 7 மணி வரை பிரதோஷ வழிபாடு செய்ய வேண்டும்.

அன்றைய தினம் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவது அவசியம். பிரதோஷம் அன்று விரதம் இருந்து கோவிலுக்கு சென்று நம் பிரச்சினைகள் அனைத்திற்க்கும் மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷத்தை ஒருபோதும் தவற விடாதீர்கள். சனி பிரதோஷம் மிகவும் விசேஷமானது. பிரதோஷம் அன்று முக்கியமானதாக கருதப்படுவது நந்தி தேவருக்கும் சிவபெருமானுக்கும் செய்யப்படும் அபிஷேகம். ந்த அபிஷேகத்திற்கு பால் தயிர் தேன் நெய் வெண்ணை சந்தனம் போன்றவற்றை தங்களால் இயன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.

விரதம் இருப்பவர்கள் பிரதோஷம் என்று காலையில் ஆரம்பித்து மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு தரிசித்து சிவாலயம் சென்று வீட்டுக்கு வந்தவுடன் விரதத்தை முடிக்கலாம். சாதாரண நாட்களில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்று கூறுவர். அதே சனிக்கிழமை வரும் மகா பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் 5 வருடம் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த பிரதோஷ விரதம் மேற்கொள்ளும் போது சிவபெருமானின் மந்திரங்கள் ஸ்லோகங்களை பாராயணம் செய்ய வேண்டும். ஒரு மனதுடன் நம் பிரச்சினைகளை சரியாக வேண்டும் என்று நினைத்து வணங்க வேண்டும். பிரதோஷ விரதம் மேற்கொள்ளும் போது குழந்தை வரம், திருமணம் தடை, நோய், காரியத்தடை போன்றவை விலகி சகல சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும்.