வாரத்திற்கு 90 மணி நேரம் சம்பளத்திற்கு வேலை பார்த்த இளைஞர்.. இன்று ரூ.80 கோடிக்கு சொந்தக்காரர்..!

By Bala Siva

Published:

அமெரிக்காவை சேர்ந்த 30 வயது நபர் ஒரு நிறுவனத்தில் சம்பளத்திற்காக வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்த்த நிலையில், இன்று அவர் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கிரேவ்ஸ் என்பவர் அமெரிக்காவின் 400 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு இந்த பட்டியலில் 107வது இடம் கிடைத்துள்ளது.

தற்போது 52 வயதான கிரேவ்ஸ், 30 வயதாக இருக்கும் போது ஒரு வாரத்திற்கு 90 மணி நேரம் உழைத்தார். சிறுவயதிலேயே, கல்லூரியில் படிக்கும்போதே, அவருக்கு ஒரு ரெஸ்டாரண்ட் திறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. யாரும் செய்ய முடியாததை செய்து காட்ட வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோளாக இருந்தது. சிக்கன் ஃபிங்கர் என்ற புதிய உணவை அறிமுகம் செய்ய வேண்டும், அந்த ஒரே ஒரு டிஷ் மட்டும் உள்ள ரெஸ்டாரண்டை திறக்க வேண்டும், அந்த ரெஸ்டாரன்ட் உலகம் முழுவதும் கிளைகளை கொண்டதாக மாற வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது.

இந்த ரெஸ்டாரன்ட் தொடங்குவதற்கு பணம் தேவை என்பதற்காக, அவர் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்தார். அதன்பின் அதிக அளவு சம்பளம் கிடைக்கும் என்பதற்காக இன்னொரு நிறுவனத்தில் வேலை பார்த்ததாக தெரிகிறது. இதனை அடுத்து, அவர் ஒரு சிறிய அளவில் சிக்கன் ஃபிங்கர்ஸ் மட்டுமே விற்கும் ரெஸ்டாரன்டை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லை என்றாலும், அதன் பிறகு அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது.

சுமார் 50,000 டாலர் தனது சொந்த பணத்தை செலவிட்ட அவர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வங்கியிலிருந்து கடன் வாங்கி ஒரு லட்சம் டாலர் வரை முதலீடு செய்தார். இன்று, அவருடைய நிறுவனம் உலகம் முழுவதும் 800 கிளைகளை கொண்டதாக உள்ளது, மேலும் அவரது சொத்து மதிப்பு ரூ.80 கோடி என  கூறப்படுகிறது.
“எனக்கு பிறகு, இந்த நிறுவனத்தை என் குழந்தைகள் நடத்த வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றும், “இதனை உலகளாவிய வணிகமாக மாற்றியது எனது கடின உழைப்பே” என்றும், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.