ஒவ்வொரு மெகா ஏலத்துக்கு முன்னாடியும்.. சிஎஸ்கே திட்டம் போட்டு தூக்கிய வீரர்கள் யார்.. முழு விவரம் இதோ..

By Ajith V

Published:

இனி கொஞ்ச நாளைக்கு எந்த பக்கம் நாம் போனாலும் ஐபிஎல் தொடர்பான செய்திகளை தான் அதிகமாக பார்க்க முடியும். இதற்கு காரணம் மெகா ஏலத்திற்கு முன்பாக சில முக்கியமான விதிகளை பிசிசி அறிவித்திருந்தது தான். ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல், அது பற்றி செய்திகள் வந்தாலே சர்வதேச போட்டிகளுக்கு நிகராக ரசிகர்கள் பார்க்க தொடங்கி விட்டார்கள்.

வெறுமென டி20 லீக் போட்டிகளாக மட்டுமில்லாமல் அதில் நிறைய விறுவிறுப்புகளும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல ரோஹித், கோலி என இந்திய அணியில் இணைந்து ஆடும் வீரர்கள் ஐபிஎல் தொடர் என வரும் போது வெவ்வேறு அணிகளுக்காகவும் ஆடுகின்றனர். இதுவே ரசிகர்கள் மத்தியில் ஒரு உச்சகட்ட விறுவிறுப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இவை அனைத்தையும் தாண்டி நிறைய இந்திய இளம் வீரர்கள் சாதிப்பதற்கான சிறந்தள்மாகவும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது. இன்னொரு பக்கம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை அதிகம் பார்க்காதவர்கள் கூட ஐபிஎல் போட்டிகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

ந்த வகையில், கடந்த 17 ஆண்டு ஐபிஎல் தொடர்கள் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளவர் என்றால் நிச்சயம் தோனியை கைகாட்டி விடலாம். சிஎஸ்கே அணியின் கேப்டனாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை இயங்கி வந்த தோனி, ஐந்து முறை அந்த அணி கோப்பையை வெல்ல உதவி உள்ளார். இது போக, அதிக முறை இறுதி போட்டி ஆடிய ஐபிஎல் அணி, அதிக முறை பிளே ஆப் போன அணி என்ற பல பெருமைகளும் சிஎஸ்கேவுக்கு கிடைக்க தோனி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அப்படி இருக்கையில், வர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவது தொடர்பாக அடுத்த 10 தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. பில் மெகா ஏலம் வரும் நவம்பர் மாத இறுதியில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்கப்படும் வீரர்கள் தொடர்பாக பல முக்கியமான முடிவுகளையும் எடுத்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் தோனி சிஎஸ்கே அணியில் தொடர்ந்து ஆடுவது பற்றி அவர்கள் விரைவில் முடிவை எடுப்பார்கள் என கருதப்படுகிறது. இதனிடையே, ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

முதல் முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடந்திருந்தது. அப்போது தோனி, ரெய்னா, ஆல்பி மோர்கல் மற்றும் முரளி விஜய் ஆகியோரை சிஎஸ்கே அணி தக்க வைத்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஜடேஜா, தோனி, ரெய்னா, அஸ்வின் மற்றும் பிராவோ ஆகியோரையும், 2018 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக ஜடேஜா, தோனி மற்றும் ரெய்னா ஆகியோரை தக்க வைத்திருந்தது சிஎஸ்கே.

இதன் பின்னர் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை முன்னிட்டு தோனி, ஜடேஜா, ருத்துராஜ் மற்றும் மொயீன் அலி ஆகியோரை தக்க வைத்துக் கொண்ட சிஎஸ்கே, இந்த முறை யார் யாரை எல்லாம் திட்டம் போட்டு தொடர போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.