வீடியோ, ஆடியோவை உருவாக்கும் மெட்டா AI..வேற லெவலில் டெக்னாலஜி முன்னேற்றம்..!

By Bala Siva

Published:

 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளை நடத்தி வரும் மெட்டா நிறுவனம், தற்போது AI துறையில் காலடி வைத்துள்ள நிலையில், புதிதாக வீடியோ மற்றும் ஆடியோக்களை உருவாக்கும் வகையில் புதிய வசதி செய்து கொடுத்துள்ளது. இந்த வசதி பயனர்களுக்கு வேற லெவலில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்டா நிறுவனம், ஒரு சிறிய வீடியோ கிளிப் உருவாக்கி, அதற்கேற்ற ஆடியோ மற்றும் பின்னணி இசையையும் ஏஐ மூலம் உருவாக்கும் வசதியை கொண்டுள்ளது. இந்த வீடியோ உண்மையாகவே ஒரு கேமராவை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ போல் இருக்கும் என்றும், அதேபோல் ஆடியோ மற்றும் பின்னணி இசை மிகவும் இயற்கையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அது மட்டும் இன்றி, எடிட்டிங் செய்யும் வசதியும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 16 செகண்ட் வீடியோ மற்றும் 45 செகண்ட்ஸ் ஆடியோவை உருவாக்கும் வகையில் இந்த டெக்னாலஜி தற்போது உயர்ந்துள்ளது. காட்டில் உள்ள மிருகங்கள், இயற்கை காட்சிகள், ஆன்மீக தியான வழிபாடுகள் உள்ளிட்ட பல வீடியோக்களை இந்த மெட்டா AI மூலம் உருவாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. உருவாக்கப்பட்ட வீடியோவை எடிட்டிங் செய்வதற்கான பல்வேறு டூல்ஸ் வசதியும் உள்ளது என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வீடியோ மற்றும் ஆடியோக்களை உருவாக்குவதில் ஓபன் ஏஐ, ரன்வே, லெவன் லேப் உள்ளிட்ட சில இணையதளங்கள் உள்ள நிலையில், தற்போது அதற்கு போட்டியாக மெட்டா நிறுவனமும் களமிறங்கியுள்ளது. தில் உருவாக்கப்படும் வீடியோக்களை ஹாலிவுட் திரைப்படங்களில் கூட பயன்படுத்தும் அளவுக்கு மிகவும் தரம் உயர்ந்ததாக இருக்கும் என்றும், வேற லெவலில் உருவாக்கப்படும் இந்த வீடியோக்களை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags: audio, meta ai, video