அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் 14 ஆயிரம் மேலாளர்களை வேலை நீக்கம் செய்ததை அடுத்து, 25,000 கோடி மிச்சப்படுத்தியதாக கூறப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான், கடந்த சில வாரங்களாகவே வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், திடீரென சுமார் 14,000 பதவிகளை காலி செய்ததாக கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவும், லாபத்தை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ள சிஇஓ ஆன்டி ஜாஸி, முதல் கட்டமாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு பதவிகளில் உள்ள ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் 14,000 பதவிகள் காலி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த மேலாளர்களின் எண்ணிக்கையில் இது ஏழு சதவீதம் என்றும், ஒரு லட்சத்து ஐயாயிரம் மேலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது 91,900 மேலாளர்கள் மட்டுமே உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.25 ஆயிரம் கோடி நிறுவனம் மிச்சப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் 15 மில்லியன் ஊழியர்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமான அமேசான், திடீரென 14,000 பேரை பதவி நீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இன்னும் சில வேலை நீக்க நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.