Google Pay என்பது பணம் ஒருவருக்கு அனுப்புவது, பெறுவது மட்டுமின்றி பல்வேறு வசதிகளை பயனர்களுக்கு செய்து கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது தங்க நகை கடன்களை Google Pay மூலம் வாங்கலாம் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த “Google India 2024” என்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. Google நிறுவனம் இதற்காக Muthoot Finance நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இனி Google Pay மூலம் Muthoot Finance நிறுவனத்திடம் தங்க நகை கடன்களை மிக எளிமையாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இந்த கடனை பெறுவதற்கு எந்தவித சிரமமும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கம் என்பது சேமிப்புக்காக மட்டுமின்றி அவசர தேவைக்கு அடகு வைத்துக் கொள்ளும் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மிகவும் எளிமையாக Google மற்றும் Muthoot மூலம் இந்த கடன் வசதி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரங்களை அருகிலுள்ள Muthoot Finance நிறுவனத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வசதி மூலம் கடன் வாங்கும் போது மிகவும் குறைவான வட்டியில் கடன் கிடைக்கும் என்றும், எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் தங்க நகை அடகு வைத்து கடன் பெற முடியும் என்றும், மற்ற வங்கிகளை விட அதிகமாக கடன் பெறலாம் என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்ற ஒரே நிபந்தனையுடன் இந்த கடன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது