நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்ல வேண்டுமா? கூகுளின் புதிய வசதி..!

By Bala Siva

Published:

 

கூகுள் தற்போது “லொகேஷன் ஷேரிங்” என்ற ஒரு புதிய வசதியை வழங்கி இருக்கிறது. இதன் மூலம், நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நமது வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு தெரிவிக்க மிக வசதியாக இருக்கும்.

கூகுளில் “லொகேஷன் ஷேர்” என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது. அதை எனேபிள் செய்தால், ஒரு லிங்க் கிடைக்கும். அந்த லிங்கை நமது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனுப்பினால், அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால், நாம் எங்கு இருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும். பயணம் செய்யும் போதும், வெளியூர் சென்றிருக்கும் போது, நமது குடும்பத்தினர் நம்மை எங்கு இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள, இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதை எளிதில் செயல்படுத்த செட்டிங்ஸ் சென்று, “All Services” என்ற பகுதிக்குள் கூகுள் லொகேஷன் ஷேரிங் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் எந்த ஜிமெயில் ஐடியில் இருக்கிறீர்கள் என்பது காண்பிக்கப்படும். அதன் பின் லொகேஷன் ஷேரிங்கை எனேபிள் செய்து, கிடைக்கும் லிங்கை உங்களுடைய உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு அனுப்பலாம்.

அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்த உடன், நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பது அவர்களுக்கு தெரியும். இந்த வசதியை தேவையான நேரத்தில் மட்டும் எனேபிள் செய்து, தேவையில்லாத நேரத்தில் டிசேபிள் செய்யலாம். இதே சமயத்தில், அந்த லிங்கை தவறான நபர்களுக்கு அனுப்பியால், அது தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, லிங்கை அனுப்பும்போது கவனமாக இருக்க வேண்டும்.