20 வருடத்திற்கு முன் பிச்சை எடுத்த சிறுமி இன்று டாக்டர்.. எப்படி நடந்தது இந்த அதிசயம்..!

By Bala Siva

Published:

 

20 வருடங்களுக்கு முன் தனது தாய், தந்தையருடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுமி, இன்று எம்பிபிஎஸ் படித்து முடித்து மருத்துவர் ஆகியுள்ளார் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு, தர்மசாலா பகுதியில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். பசி காரணமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அந்த சிறுமியையும், அவரது பெற்றோரையும் தற்செயலாக பார்த்த ஒரு புத்த பிட்சு, அந்த குழந்தை எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆளாக வருவார் என்று கணித்தார்.

இதனை அடுத்து, அந்த சிறுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, “இந்த சிறுமியை என்னோடு அனுப்பினால், நான் நன்றாக படிக்க வைப்பேன்” என்று கூறினார். முதலில் தயங்கிய சிறுமியின் அப்பா, அதன் பிறகு தனது மகளின் எதிர்காலத்தை கருதி அந்த புத்த பிட்சுவை நம்பி, தனது மகளை அனுப்பி வைத்தார்.

இதனை அடுத்து, தர்மசாலாவில் உள்ள பள்ளியில் அந்த சிறுமி சேர்க்கப்பட்டார். சிறுமிக்கு நன்றாக படிப்பு வந்தது. அதன் பிறகு, அவர் எம்பிபிஎஸ் படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினார். ஆனால், அவர் பெற்ற மதிப்பெண்களுக்கு தனியார் கல்லூரியில் மட்டுமே இடம் கிடைக்கும் சூழலில் இருந்தது. இதனை அடுத்து, அந்த புத்த பிட்சு அவரை சீனாவுக்கு 2018 ஆம் ஆண்டு அனுப்பி, மெடிக்கல் படிக்க வைத்தார். சீனாவில் படிப்பை முடித்துவிட்டு, தற்போது இந்தியாவில் பிராக்டிஸ் செய்வதற்கான தேர்வையும் எழுதி முடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது மருத்துவர் ஆகியுள்ள அந்த இளம் பெண், தன்னை வாழ்வு கொடுத்த புத்த பிட்சுவை சந்தித்து, தனது நன்றியை தெரிவித்து, டாக்டர் பட்டத்துடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.

பிச்சை எடுப்பவர்களாக இருந்தாலும், படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இல்லை.

Tags: beggar, doctor, MBBS