குளிகை நல்ல நேரமா கெட்ட நேரமா? அந்த நேரத்தில் என்ன காரியங்களை செய்யலாம்?

By Meena

Published:

நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் போதும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து தான் தொடங்குவோம். குறிப்பாக பஞ்சாங்கம் பார்ப்பார்கள். அப்படி பஞ்சாங்கம் பார்க்கும்போது அதில் ராகு காலம் எமகண்டம் குளிகை போன்ற பல நேரங்கள் இருக்கும். இதில் குளிகை என்ற நேரம் நல்ல நேரமா கெட்ட நேரமா? அந்த நேரத்தில் என்ன காரியங்கள் செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.

இந்த குளிகை நேரம் என்பது பலருக்கும் தெரியாது. இது நல்ல நேரமா? அதிர்ஷ்டம் தருமா? அந்த நேரத்தில் நல்ல காரியங்களை தொடங்கலாமா என பல குழப்பங்கள் இருக்கலாம். குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நல்ல நேரமாக தான் பார்க்கப்படுகிறது. குளிகை நேரத்தில் ஒரு காரியங்களை செய்யும்போது அது பன்மடங்காக பெருகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குளிகை நேரத்தில் பொன் பொருட்கள் வாங்குவது, வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, கடன்களை அடைத்தல், பணத்தை சேமித்தல் போன்றவற்றை செய்தால் அது பல மடங்காக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது போன்ற சுப நிகழ்ச்சிகளை குளிகை நேரத்தில் பயப்படாமல் தொடங்கலாம்.

குளிகை நேரத்தில் ஒரு விஷயங்களை செய்யும் போது அது திரும்பத் திரும்ப நடக்கும் என்று கூறப்படுவதால் அந்த நேரத்தில் திருமணம் செய்யக்கூடாது. வீட்டை இடிப்பது, கடன் வாங்குவது செய்யக்கூடாது. குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் அது கடன் சுமையை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குளிகன் என்பது சனியின் மைந்தன் என்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த நேரம் என்றும் கூறுவார்கள். அதனால் எந்த ஒரு காரியம் தொடங்கும் போதும் பஞ்சாங்கம் பார்த்துவிட்டு நம்முடைய சுய ஜாதகத்தையும் பார்த்துவிட்டு அதற்கு பொருந்தும் நேரங்களில் தொடங்குவது நல்ல பலன்களைத் தரும்.