பெங்களூரு குகையில் இருந்து 188 வயது நபர் மீட்கப்பட்டாரா? வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?

By Bala Siva

Published:

பெங்களூரு குகையில் இருந்து  188 வயது நபர் ஒருவர் மீட்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரல் ஆகிவரும் நிலையில், இதன் உண்மை தன்மை குறித்து பல சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அக்டோபர் நான்காம் தேதி திடீரென சமூக வலைதளங்களில் 188 வயது நபர் ஒருவர் பெங்களூரில் உள்ள குகை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாகவும், அவரை இருவர் கைதாங்கி அழைத்துச் செல்லும் காட்சியும் கொண்ட 24 வினாடிகள் வீடியோ ஒன்று வைரலாகி, கோடிக்கணக்கானவர்கள் பார்த்து வருகின்றனர். இந்த வீடியோவின் உண்மை தன்மையை பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட நபர் 188 வயதுடையவர் அல்ல என்றும், அவருடைய உண்மையான வயது 109 என்றும், இவரது பெயர் சியாராம் பாபு என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவருடைய வீடியோ ஏற்கனவே பலமுறை இணையத்தில் வைரலாகி வருகிறது என்றும், 109 வயதில் அவர் தனக்கு தேவையானவற்றை தானே செய்து கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், பெங்களூரு குகையிலிருந்து மீட்கப்பட்டவரின் வயது 188 அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு மனிதன் 188 வயது வாழ்வது சாத்தியம் அல்ல என்றும் பலரும் இந்த வீடியோவுக்கு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

https://x.com/BGatesIsaPyscho/status/1841736419435291116