Work From Home நடைமுறை முடிந்தது.. மீண்டும் உச்சம் சென்ற ரியல் எஸ்டேட் துறை..!

By Bala Siva

Published:

 

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் Work From Home என்ற நடைமுறையை அமல்படுத்தியது. இந்த நடைமுறை, ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருந்ததால், கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்த பின்னரும், இதை தொடர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், பல நிறுவனங்கள் Work From Home நடைமுறையை முடித்து, அலுவலகத்திற்கு வந்து பணி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் தற்போது இந்த நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் மீண்டும் ரியல் எஸ்டேட் துறை உச்சத்தை தொட்டதாக கூறப்படுகிறது. பல நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தை காலி செய்தன என்பதும், சில நிறுவனங்கள் அலுவலகத்தை பாதியாக குறைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது மீண்டும் அலுவலகம் வந்து பணி செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது. இதனால், இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் துறை உச்சத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெங்களூரில் மட்டும் 6 மில்லியன் சதுர அடி அலுவலகத்திற்கு வாடகை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாதங்களில் 46 மில்லியன் சதுர அடி வாடகைக்கு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் உள்பட முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை உச்சத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

வருங்காலத்தில், இன்னும் ஒரு லட்சம் சதுர அடி வரை அலுவலகத்திற்காக தேவைப்படும் என்றும், அதற்காக ரியல் எஸ்டேட் துறையினர் தயாராகி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, Work From Home நடைமுறை முடிவுக்கு வந்துள்ளதால், தற்போது ஊழியர்கள் வாடகைக்கு வீடுகள் மற்றும் அறைகள் தேடி தங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், வாடகையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.