வாஸ்துப்படி எந்த பொருளை எங்க வைக்கனும்ன்னு தெரியுமா?!

வீட்டில் எந்த ஒரு பொருளையும் எந்த இடத்தில் வைக்க வேண்டுமென வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இடம் மாற்றி வைத்தால் இல்லத்தில் சின்ன சின்ன குறைபாடுகள் முதற்கொண்டு பெரிய பெரிய அசம்பாவிதங்கள் வரை நடக்க வாய்ப்புகள்…

வீட்டில் எந்த ஒரு பொருளையும் எந்த இடத்தில் வைக்க வேண்டுமென வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இடம் மாற்றி வைத்தால் இல்லத்தில் சின்ன சின்ன குறைபாடுகள் முதற்கொண்டு பெரிய பெரிய அசம்பாவிதங்கள் வரை நடக்க வாய்ப்புகள் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இல்லையென்றால் எதிர்மறை ஆற்றல் உண்டாகி இழப்பை ஏற்படுத்தும். அதனால் எந்த பொருளை எங்கே வைக்கவேண்டுமென வாஸ்து சாஸ்திரம் சொல்கின்றது என பார்க்கலாம்?!

நம் அனைவரின் வீட்டிலும் கடிகாரம் நிச்சயம் இருக்கும். சுவரில் தொங்க விடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால்தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும், அதையே தவறான திசையில் மாட்டினால், எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும். கடிகாரத்தைக் கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது. வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவரிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. ஏனெனில், தெற்கு யமதர்மராஜனின் திசையாகும். கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவரில் தொங்கவிடுவது நல்லது.

24034efc123f835fcaa8df3874cc61ea

எல்லோர் வீட்டிலும் இருக்கும் பொருட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. இந்தக் கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.அதனால், வீட்டின் சுவரில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதே போல் கண்ணாடியை வடக்கு கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாகத் தரையில் இருந்து 4 அல்லது 5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்.

வீட்டை அலங்கரிக்க பல்வேறு ஓவியங்களை வாங்கி சுவரில் தொங்க விடுவது வழக்கம். 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியத்தினை வீட்டில் வைப்பதால் ம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும். ஆனா, இதை சரியான திசையில் வைக்கவேண்டும். குதிரை ஓவியத்தை நுழைவு வாயிலை நோக்கித் தொங்க விடக்கூடாது. அதே போல் சமையலறை, குளியலறையை நோக்கியும் வைக்கக்கூடாது. இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்கவிட வேண்டும்.

மணி ப்ளாண்ட் கொடியை வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வளர்க்கனும்.

அருவி, ஆறு மாதிரியான ஓடும் நீர் போன்ற காட்சிப்பொருட்களால் வீட்டை அலங்கரிப்பார்கள். இப்படி நீர் ஓடுவது போன்ற காட்சிப்பொருளில் இருந்து வெளிவரும் சப்தம், மனதை அமைதியாக வைக்க உதவும். அதோடு வீட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவும் செய்யும். இந்த காட்சிப்பொருளை வடகிழக்கு திசையை தவிர எந்த பக்கம் பார்த்தும் வைக்கலாம்.

இவ்வாறு எந்த பொருளை எங்கே வைக்க வேண்டுமென தெரிந்து , அந்த பொருளை அங்கே வைத்து வீட்டில் நேர்மறையான அலைகள் உலாவுவதை அதிகரியுங்கள்!

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன