அஜீத்துடன் குட் பேட் அக்லி படத்தில் மோதப்போகும் வில்லன் யார் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தான் குட் பேட் அக்லி. தற்போது அஜீத் நடித்து முடித்துள்ள விடா முயற்சி படத்தின் போஸ்ட்…

Good Bad Ugly

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தான் குட் பேட் அக்லி. தற்போது அஜீத் நடித்து முடித்துள்ள விடா முயற்சி படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் படம் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியாக அஜீத் நடிப்பில் துணிவு படம் வெளிவந்த இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் அஜீத்தை அடுத்து திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

விடாமுயற்சி படக்குழுவும் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அஜீத்தின் 63-வது படமாக உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏற்கனவே நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அஜீத்துடன் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளார். இதில் அவருக்கு வில்லன் கதாபாத்திரமா என்பது இன்னும் உறுதியான தகவல் தெரியவில்லை.

இந்நிலையில் பிரசன்னா வெளியிட்ட பதிவில், நடிகர் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. மங்காத்தா படத்திற்குப் பின் அவரின் ஒவ்வொரு படங்களிலும் நடிக்க வேண்டுமென நினைப்பேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் நிறைய நடந்தது. ஆனால் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நனவாகியுள்ளது. கடவுளுக்கும், அஜீத்திற்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், அஜீத் குமார் படத்தில் நான் இருக்க வேண்டும் என விரும்பியவர்களுக்கும் நன்றி.

ஒரே படத்தின் மூலம் டாப் டைரக்டர்… மாரி செல்வராஜின் பெரிய பட்ஜெட் Movie Lineups…

எனது சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. என்னால் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது.” என்று பிரசன்னா கூறியிருக்கிறார்.

ஏற்கனவே சமீபத்தில் வெளியான தி கோட் படத்தில் விஜய்யுடன் நடிகை சினேகா 20 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது அஜீத் படத்தில் பிரசன்னா இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.