ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஹேக் செய்யப்பட்டதா? 1 கோடி பயனர்களின் டேட்டா லீக்?

By Bala Siva

Published:

 

சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயக்கவும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஹேக் செய்யப்பட்டதாகவும் இதனால் சுமார் ஒரு கோடி பயனர்களின் மெடிக்கல் டேட்டாக்கள் லீக் ஆகி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஏராளமான ஒரு மெடிக்கல் பாலிசிகளை பதிவு செய்துள்ளனர் என்பதும் இந்நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டு இருக்கும் நிலையில் திடீரென இந்த நிறுவனத்தின் டேட்டாக்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் அவை டெலிகிராமில் லீக் ஆகி வருவதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பாக டெலிகிராம் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.