நடந்தால் மின்சாரம் உற்பத்தியாகுமா? ஆச்சர்யமூட்டும் ஜப்பானின் புதிய தொழில்நுட்பம்…

By Meena

Published:

ஜப்பான் தொழில்நுட்ப சாதனங்களுக்கு உலகில் மற்ற நாடுகள் அனைத்திற்கும் முன்னோடியாக இருக்கிறது. எந்த ஒரு புதிய சாதனம் என்றாலும் ஜப்பான் தான் முதலாவதாக தயாரிக்கும். ஏன் தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளை விட இரண்டு அடி முன்னால் தான் ஜப்பான் செல்கிறது.

இந்த வகையில் ஜப்பான் தற்போது புதிய ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருக்கிறது. பொதுவாக மின்சாரம் தயாரிப்பது பல வழிகளில் செயல்பட்டு வருகிறது. சூரிய ஒளியின் மூலம் ராட்சத காற்றாடிகள் மூலம் தண்ணீர் மூலம் என மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடந்தால் மின்சாரம் உற்பத்தியாகும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அப்படி ஒரு தொழில்நுட்பத்தை தான் ஜப்பான் உருவாக்கி இருக்கிறது. ஸ்மார்ட் டைல்ஸ் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆரம்பித்து இருக்கிறது ஜப்பான்.

ஜப்பானின் டோக்கியோ தலைநகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த ஸ்மார்ட் டைல்ஸ் பதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் இதன் மீது நடந்து செல்லும் போது அதனால் ஏற்படும் கைநட்டிக் எனர்ஜி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்திற்கு பைசோ தொழில்நுட்பம் என்று கூறுகிறார்கள். முதற்கட்டமாக இதில் வெற்றி கண்டிருக்கிறது ஜப்பான். நகரத்தின் மற்ற பகுதிகளிலும் இந்த டைல்ஸ்களை பதிக்க திட்டமிட்டு இருக்கிறது ஜப்பான் அரசு.

இந்த தொழில்நுட்பத்தை பார்த்து மற்ற நாடுகளும் இந்த ஸ்மார்ட் டைல்ஸை பதித்து மின்சாரம் தயாரிக்கும் முறையை செயல்படுத்த ஆலோசனை செய்து வருகிறது. இதை பார்த்த மக்கள் இப்படி ஒரு கண்டுபிடிப்பா என்று ஆச்சரியமடைந்து வருகின்றனர்.