Pomegranate Seeds: மாதுளையை விதையுடன் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

இரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் மாதுளம் பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம். இவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு எளிதாக அதிகரிக்கிறது. மாதுளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கியம் மற்றும்…

pomegranate

இரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் மாதுளம் பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம். இவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு எளிதாக அதிகரிக்கிறது. மாதுளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகள் என்ன? இப்போது பார்க்கலாம்.

மாதுளை விதை:

பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான, மாதுளை பழத்தில் உள்ள விதைகளில் சிறந்த ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. உங்களுக்குத் தெரியுமா?, ஒரு மாதுளை பழத்தில் சுமார் 600 விதைகள் உள்ளன. ஒரு மாதுளையில் 7 கிராம் நார்ச்சத்து, 3 கிராம் புரதம், 30 சதவீதம் வைட்டமின் சி, 16 சதவீதம் ஃபோலேட் மற்றும் 12 சதவீதம் பொட்டாசியம் உள்ளது. ஒரு கப் மாதுளையில் 24 கிராம் சர்க்கரை மற்றும் 144 கலோரிகள் உள்ளன.

pomegranate-pic

இரண்டு வாரங்களுக்கு தினமும் 150 மிலி மாதுளை சாறு குடித்து வர இரத்த அழுத்தம் கணிசமாக குறைகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளையை விட சிறந்த மருந்து இல்லை. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாதுளையை சாப்பிடுவதால் ரத்த அணுக்களில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது.

மேலும், மாதுளை பழங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மாதுளையை தொடர்ந்து உட்கொள்வதால் அல்சைமர் நோய் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மாதுளையின் நன்மைகள்:

  • குளிர்காலத்தில் மாதுளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
  • மாதுளையில் சிறந்த வயதான எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
  • மாதுளை இரத்தத்தில் இரும்பை உருவாக்குகிறது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
  • இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் கேன்சர் ரேடிக்கல்களைத் தடுக்கின்றன.
    மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது பல ஊட்டச்சத்து மதிப்புகளைக் கொண்டுள்ளது
  • முதுமைக்கு வழிவகுக்கும் ப்ரீ-ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் உங்களை இளமையாக வைத்திருக்கும்.
  • மாதுளை விதைகளில் வைட்டமின் பி, சி, கே மற்றும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற பல்வேறு தாதுக்கள் நிறைந்துள்ளன.
  • மாதுளை மலச்சிக்கல், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

மாதுளம் பழம் தரும் அழகு நன்மைகள்:

  • தினமும் ஒரு கப் மாதுளை விதைகளை சாப்பிடுவது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.
  • வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இவை சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது
  • மாதுளையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை இழக்காமல் தடுக்கிறது.
  • எண்ணெய் பசை மற்றும் முகப்பரு போன்ற சருமத்தை குறைப்பதில் மாதுளை ஒரு சூப்பர் பழம்.
  • பல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட மாதுளை மிகவும் உதவியாக உள்ளது.