இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க.. நீங்களும் சமையல் ராணி தான்..

By John A

Published:

தினசிரி நாம் மளிகைக் கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும், சந்தைகளிலும் சென்று வீட்டிற்கு சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகிறோம். சில பொருட்கள் மாதக் கணக்கில் கூட இருக்கும். ஆனால் சில பொருட்களின் பயன்பாடு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட பொருட்களை எப்படி பத்தரமாகப் பாதுகாப்பது என்பது குறித்த டிப்ஸ் தான் இது.

  • வாழைப்பழம் வாங்கினால் அதன் காம்புப் பகுதிகளை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்தால் நான்கு நாட்கள் வரை கருத்துப் போகாது.
  • கறிவேப்பிலை காய்ந்து விட்டதா கவலை வேண்டாம். இனி கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் வைத்துப் பாருங்கள். பச்சைத் தன்மை மாறாது.
  • இட்லி மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்க வெற்றிலை ஒன்று போதும். வெற்றிலையை காம்பினைக் கிள்ளாமல் குப்புற இருப்பது பால் போட்டு வைத்தால் இரண்டு நாட்களுக்கு இட்லி மாவு கெடாது.
  • தோசை மொறுமொறுவென வர வேண்டுமா? தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை ஊற்றிப் பாருங்கள். மொறு மொறு தோசை ரெடி.

கோடி புண்ணியம் கிடைக்கும்… நாளை அமாவாசை விரதம் இருந்து இப்படி வழிபடுங்க…!

  • கறிவேப்பிலை காய்ந்து விட்டால் இனி தூக்கி எறியாதீர்கள். இட்லி வைக்கும் போது இட்லி பானையில் ஊற்றப்படும் தண்ணீரில் கறிவேப்பிலையைப் போட்டுப் பாருங்கள். வாசனை மூக்கை நுழைக்கும்.
  • வெந்தயத்தை வறுத்து சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
  • கிழங்கு சீக்கிரம் வேக சிறது உப்பு கலந்த நீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின் வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
  • சப்பாத்தி மாவு ஒட்டாமல் இருக்க சிறிதளவு உப்பினை கையில் தடவிக் கொண்டு பின் மாவு பிசையுங்கள். கையில் ஒட்டாது.
  • கோடை காலத்தில் பெருங்காம் கட்டி போன்று ஆகி விடும். எனவே மிருதுவாக இருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டு வைத்தால் கெட்டி படாது.
  • கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருக்க சிறிது உப்பை தூவி வைத்தால் போதும்.
  • உருளைக் கிழங்கினை பொறிக்கும் போது புளிப்பு இல்லாத தயிரை சிறிதளவு ஊற்றி செய்தால் மிகச் சுவையாக இருக்கும்.
  • உருளைக் கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவிப் பாருங்கள். பளபளப்பு கூடும். ரசம் செய்யும் போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் ருசி பல மடங்கு கூடும்.