உலக அளவில் முடங்கியது பிளே ஸ்டேஷன் நெட்வொர்க்.. பயனாளிகள் அதிருப்தி..!

By Bala Siva

Published:

உலக அளவில் திடீரென பிளே ஸ்டேஷன் இயங்காமல் முடங்கியதால் பயனாளிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று திடீரென உலகளவில் பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் முடங்கியதாகவும், சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4, 5 மற்றும் அதற்கு முந்தைய மாடல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் பிளே ஸ்டேஷன் மூலம் கேம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை பதிவு செய்து வருகிறார்கள்.

சோனியின் பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் முடங்கியதை அடுத்து, பலரும் சமூக வலைதளங்களில் அதைப் பற்றி புலம்பி வருகிறார்கள். இதற்கு பதிலளித்த சோனி நிறுவனம், நெட்வொர்க்கில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பயனர்கள் கேம்கள் மற்றும் ஆப்ஸ்களை பிளே ஸ்டேஷனில் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பிரச்சனையை சரிசெய்து வருவதாகவும், விரைவில் அனைத்தும் இயல்பு நிலைக்கு வரும் என்றும் கூறியுள்ளனர். எனினும், பல மணி நேரமாக கேம்களை விளையாட முடியாத நிலையில், பிளே ஸ்டேஷன் பயனாளர்கள் தங்களது அதிருப்தியை தொடர்ந்து பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.