வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டு நாட்கள் மழை காரணமாக ரத்தானதால் பலரும் போட்டி டிராவில் முடியும் என்று தான் எதிர்பார்த்தனர். ஆனால் அதே வேளையில் கிடைத்த இரண்டு நாட்களில் இந்திய அணி மிகச் சரியாக திட்டம் போட்டு நினைத்ததை செயல்படுத்தி தற்போது வெற்றியையும் பெற்று தொடரையும் சொந்தமாக்கி விட்டது.
முதல் மூன்று நாட்களில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில் வங்கதேச அணி பேட்டிங் செய்து 107 ரன்கள் சேர்த்திருந்தது. நான்காவது நாளில் மழை குறுக்கிடாததால் தொடர்ந்து போட்டி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 233 ரன்களில் ஆல் அவுட்டாக தொடர்ந்து ஆடிய இந்திய அணி 35 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது.
டெஸ்ட் போட்டி என வரும் போது நிதானமான ஆட்டத்தை ஆடி டிரா செய்யும் நோக்கில் தான் இந்திய அணி ஆடும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தால் அப்படியே நேர்மாறான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி பல முக்கியமான சாதனைகளையும் டெஸ்ட் அரங்கில் படைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தங்களின் இரண்டாவது இன்னிங்சை ஆடி இருந்த வங்கதேச அணியால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. 47 ஓவர்கள் முடிவில் 146 ரன்களில் ஆல் அவுட்டாக இந்திய அணியின் வெற்றி இலக்கும் 95 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதனை நோக்கி ஆடிய இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, 3 விக்கெட்டுகளை இழந்து தொடரையும் வென்று விட்டனர். ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுக்க, அவருக்கு துணையாக விராட் கோலியும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்.
அப்படி இருக்கையில் தான் 21 ம் நூற்றாண்டில் முதல் அணியாக இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் அரங்கில் ஒரு அரிய சாதனையை செய்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் இரண்டு முறை தான் முதலில் பேட்டிங் செய்த ஒரு அணி 35 ஓவர்களுக்குள் டிக்ளேரை அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தென்னாபிரிக்க அணி, 35 ஓவர்களுக்குள் டிக்ளேர் செய்திருந்தது.
அந்த வகையில் தற்போது இந்த 21 ம் நூற்றாண்டில் முதல் அணியாக இந்தியா 35 ஓவர்களுக்கு டிக்ளேர் செய்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாள் முழுக்க ஆடினாலே நிதானமாக ரன் சேர்த்து டிக்ளேர் செய்வது கடினமாக இருக்கும். ஆனால், 35 ஓவர்களில் இப்படி ஒரு விஷயத்தை செய்ததுடன் அதனை வெற்றியாகவும் மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.