விஜயகாந்த் சார்கிட்ட இது நான் கத்துகிட்டு Follow பண்றேன்… சசிகுமார் பகிர்வு…

By Meena

Published:

சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் சேது திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சசிகுமார் பின்னர் இயக்குனர் அமீருடன் இணைந்து மௌனம் பேசியதே மற்றும் ராம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கி அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆகவும் நடிகராகவும் அறிமுகமான சசிகுமார் முதல் படத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் சசிகுமார். அடுத்ததாக 2019 இல் இவர் இயக்கிய ஈசன் திரைப்படம் தோல்வியை தழுவியது. அதற்குப் பிறகு நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சசிகுமார்.

அதன்படி சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, வெற்றிவேல், கொடிவீரன், அயோத்தி, கருடன் தற்போது நந்தன் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் சசிகுமார். இவரின் படங்களில் குடும்ப செண்டிமெண்ட் அதிகமாக இருக்கும். குடும்பத்துடன் இவரது படத்தை தியேட்டரில் கண்டு ரசிக்கும்படி கண்ணியமாகவும் இருக்கும். அதனால் இவருக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாக உண்டு.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சசிகுமார் விஜயகாந்த் அவர்கள் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் விஜயகாந்த் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். நம்ம மதுரையில இருந்து போயி சினிமா பேக்ரவுண்ட் எதுவுமே இல்லாம சினிமால சாதிச்சு கட்சி ஆரம்பிச்சு பிரபலமானவரு. அவர்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் ஒன்னு தான். நான் அவர் ஆபீஸ் ராவுத்தர் ஆபீசுக்கு போனது கிடையாது.

ஆனா எல்லாரும் சொல்லுவாங்க விஜயகாந்த் சார் ஆபீஸ் போனா எப்பவுமே நல்ல சாப்பாடு கிடைக்கும் அப்படின்னு சொல்லுவாங்க. அதை நான் இப்போ எடுத்துக்கிட்டு ஃபாலோ பண்றேன். என்னோட ஆபிசுக்கு யார் எப்போ வந்தாலும் நல்லா சாப்பிட்டு போலாம். என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் வயிறார சாப்பாடு போட்டுட்டு இருக்கேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் சசிகுமார்.