நான் குற்றவாளி இல்லை… ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி பதிவு அறிக்கை…

By Meena

Published:

இந்த வருடத்தின் பரபரப்பான செய்தி என்றால் அது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து தான். ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினையாக கிளம்பி வருகிறது. முதலில் ஜெயம் ரவி இந்த மாதிரி விவாகரத்து அறிக்கை வெளியிடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரது ரசிகர்கள் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து இருந்தனர்.

விவாகரத்து அறிக்கையை ஜெயம்ரவி வெளியிட்ட பிறகு இவர்களின் விவகாரத்துக்கு என்ன காரணம் இருவரும் மிகவும் அன்பான தம்பதியர்கள் ஆ வாழ்ந்து வந்தனர் என்று இணையவாசிகள் பேசி வந்தனர். ஒரு பக்கம் பாடகி கெனிஷாவுடன் சம்பந்தப்படுத்தி அவரால் தான் இவர்களுக்கு விவகாரத்தில் நடக்கிறது என்று கூறினர். இதை மறுத்து தனது பிரதர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி கெனிஷாவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருப்பார்.

அடுத்ததாக பாடகி கெனிஷாவும் ஒரு நேர்காணலில் ஜெயம் ரவிக்கும் எனக்கும் இருப்பது தொழில்முறை நட்புதான். அதை தவிர வேறு ஏதும் இல்லை என்று கூறியிருப்பார். அதற்கு அடுத்ததாக ஜெயம் ரவி ஆர்த்தியின் மீது போலீசில் புகார் செய்ததாகவும் தன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார் எனவும் தனதுடைமைகளை மீட்டுத் தருமாறும் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகி பரப்பரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி பதிவு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் எழுதியிருப்பது என்னவென்றால் என்னை சுற்றி நிறைய வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. நான் அமைதியாக இருப்பதால் அது எதுவும் உண்மை கிடையாது. நான் குற்றவாளி கிடையாது. எல்லாவற்றையும் சட்ட ரீதியாக சந்திக்கலாம் என்று இருக்கிறேன்.

இரு தரப்பு முடிவு செய்து விவாகரத்து அறிக்கை வெளியிடப்படவில்லை. அது இன்னும் எனக்கு அதிர்ச்சியான ஒரு விஷயம்தான். தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு இன்னமும் பேச விடமால் மறுக்கப்பட்டு தான் இருக்கின்றது. விரைவில் இதெல்லாம் மாறும் கடவுள் நல்ல வழி காட்டுவார் என்று நம்புகிறேன் என ஆர்த்தி பதிவிட்டு இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.