பெரிய கோளாறு புடிச்ச ஆளா இருப்பாரு போல.. ரெஸ்யூமில் போட்ட அந்த ஒரு வார்த்தை.. போட்டி போட்டு கூப்பிட்ட நிறுவனங்கள்..

By John A

Published:

இன்றைய சூழலில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் சூழலில் ஏதாவது வித்தியாசமாக செய்தால் தான் கவனத்தைத் தன்பக்கம் திருப்பி கவனிக்க வைக்கின்றனர். அப்படி ஒருவர்தான் வித்யாசமாக தயார் செய்த ரெஸ்யூம் தான் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெர்ரி லீ. கூகுள் நிறுவனத்தில் உத்தி மற்றும் செயல்பாட்டு மேலாளராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

தற்போது கூகுளிலிருந்து விலகி வேறு நிறுவனங்களில் பணி தேடி ரெஸ்யூம்களை அனுப்பி வருகிறார். இப்படி அவர் அனுப்பிய ரெஸ்யூம் தான் அவரை இன்று சுமார் 29 நிறுவனங்களில் இண்டர்வியூவுக்கு அழைத்துள்ளது. அப்படி தனது ரெஸ்யூமில் என்ன செய்தார் தெரியுமா? தொழில் முறை ஆபாச படங்களால் உலக அளவில் புகழ் பெற்ற மியா கஃலிபாவின் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார். எதில் தெரியுமா?

தன்னுடைய ரெஸ்யூமில் எக்ஸ்பர்ட் இன் என்ற பிரிவில் ஜாவா ஸ்கிரிப்ட், சி++, டைம்ஸ்கிரிப்ட் ஆகிய திறமைகளுடன் நடிகை மியா கலிஃபா மீது நிபுணத்துவம் கொண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதனை இவர் வேண்டுமென்றே சமூக பரிசோதனைக்காக செய்திருக்கிறார். இந்த ரெஸ்யூமைப் பார்த்த 29 நிறுவனங்கள் இவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளன. இதற்காக 6 வாரங்கள் வரை காத்திருக்கிறார்.

24 வருஷமா என்ஜின் ஆயில்தான் உணவு.. வடிவேலு காமெடி பாணியில் கர்நாடகாவை அதிர வைக்கும் நபர்

மேலும் தான் அதிக அளவில் வோட்கா உண்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இதனை நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்ளும் என்பதைச் சோதனைச் செய்யவே இவ்வாறு ரெஸ்யூம் தயாரித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.