உடல் சோர்வாக உள்ளதா? தினமும் சுறுசுறுப்பாக இயங்க டிப்ஸ் இதோ…

உடல் சோர்வு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான விஷயம்தான். வேலை செய்யும்போது படிக்கும்போது நமக்கு அலுப்பு ஏற்படும். ஆனால் தினமும் நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியாமல் தொடர்ந்து உடல் சோர்வாகவே இருந்தால் அது நிச்சயம்…

body 1

உடல் சோர்வு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான விஷயம்தான். வேலை செய்யும்போது படிக்கும்போது நமக்கு அலுப்பு ஏற்படும். ஆனால் தினமும் நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியாமல் தொடர்ந்து உடல் சோர்வாகவே இருந்தால் அது நிச்சயம் கவனிக்கப்படக்கூடிய விஷயம் தான். இது தொடரும் போது அது பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். உடல் சோர்வு நீங்கி தினமும் சுறுசுறுப்பாக அன்றாட பணிகளை செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இனி காண்போம்.

ஒரு நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது. முதலில் காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். அதுவும் சத்தான உணவுகளை எடுக்க வேண்டும். இட்லி, தோசை, வேக வைத்த சிறு தானியங்கள், முளைகட்டிய பயிர்கள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான ஊட்டச்சத்துடைய உணவுகளாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான அளவு நீர்ச்சத்து உடம்பில் இல்லை என்றாலும் உடல் சோர்வு ஏற்படும். அடுத்ததாக உடற்பயிற்சி செய்வது நல்லது. பரபரப்பான காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இரவு உணவை 7 மணிக்குள்ளாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் ஒரு மணி நேரம் இடைவேளை விட வேண்டும். அதற்கு பிறகு இரவு 9 மணி அல்லது பத்து மணிக்குள் தூங்க சென்று விட வேண்டும். தினமும் இதே பழக்கத்தை கொண்டு வர வேண்டும். சராசரி மனிதனுக்கு எட்டு மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை.

நல்ல ஆழ்ந்த தூக்கம் இருந்தாலே மறுநாள் நம் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தயாராகிவிடும். அதனால் தூங்குவதற்கு முன்பு போன் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. இரவு வேலைகளில் லேசான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பரோட்டா பிரியாணி பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இது போன்ற ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் நம் உடம்பு ஆரோக்கியமாக இருப்பதுடன் சுறுசுறுப்பாகவும் செயல்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.